அம்மாவான பூனை, இறுக்கி அணைத்த குட்டி குரங்கு: நெஞ்சை பிழியும் வைரல் வீடியோ

Funny Monkey Video: குரங்குக்கும் பூனைக்கும் இடையில் இப்படி ஒரு பாசமா? இணையவாசிகளின் நெஞ்சங்களை இளக வைத்த வைரல் வீடியோவை இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 3, 2023, 03:22 PM IST
  • உறவுகள் அற்புதமானவை.
  • நிலைத்தன்மை மற்றும் தனித்துவம் ஆகிய இரண்டிலும் இதன் அற்புத அம்சங்கள் தெரிகின்றன.
  • உறவுகளுக்கு கட்டுப்பாடுகளோ நியதிகளோ இல்லை.
அம்மாவான பூனை, இறுக்கி அணைத்த குட்டி குரங்கு: நெஞ்சை பிழியும் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

உறவுகள் அற்புதமானவை. நிலைத்தன்மை மற்றும் தனித்துவம் ஆகிய இரண்டிலும் இதன் அற்புத அம்சங்கள் தெரிகின்றன. உறவுகளுக்கு கட்டுப்பாடுகளோ நியதிகளோ இல்லை. உறவு என்பது யாருடன் வேண்டுமானால் ஏற்படலாம். சக மனிதர்களுடன், மனிதர்களுக்கு விலங்குகளுடன், ஒரு விலங்குக்கு மற்றொரு விலங்குடன்.. இப்படி இதற்கு எல்லைகள் கிடையாது. இதன் சான்றாக பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. தாய் பூனை, நாய் குட்டிகளுக்கு தாயாவதையும், தாய் புலி குரங்கின் குட்டிகளை ஆசையோடு பார்த்துக்கொள்வதையும் நாம் பல வீடியோக்களில் பார்த்துள்ளோம்.  

தற்போதும் அப்படி ஒரு அற்புதமான வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஒரு குரங்கு குட்டி, பூனை ஒன்றின் மடியை இறுக்கிக் கட்டிக்கொண்டிருப்பதை காண முடிகின்றது. அந்த பூனை தனது தாய் போல, குரங்கு அதன் மடியை கெட்டியாக பிடித்துக்கொண்டு செல்கிறது. 

மேலும் படிக்க | பாம்பாட்டியை பதற வைத்த ராஜநாகம் - வைரல் வீடியோ 

அழகான அந்த வீடியோவை இங்கே காணலாம்: 

இதில் காணப்படும் அன்பை, பாசத்தை, குரங்குக்கும் பூனைக்கும் இடையிலான உறவு என கூற முடியாது. இதை தாயன்பின் உறவாகவே பார்க்க முடியும். தாயன்பு உலகின் அசைக்க முடியாத பந்தமாகவும் பாசப்பிணைப்பாகவும் உள்ளது என்பதற்கு இந்த வீடியோ மற்றொரு சாட்சியாக விளங்குகின்றது. 

இந்த வீடியோ ட்விட்டரில் @buitengebieden என்ற பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இதற்கு “பூனையும் குட்டி குரங்கும்” என்று  தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே 6 லட்சத்துக்கும் அதிகமான வியூஸ்களையும் ஏகப்பட்ட லைக்களையும் பெற்றுள்ளது. இணையவாசிகள் இதற்கு ஏகப்பட்ட கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | என்னமா இது..மாணவிகள் உல்லாச நடனம்...செம்ம காமெடி வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News