வம்பிழுத்துவிட்டு பயந்தோடும் யானைக்குட்டி! க்யூட் வீடியோ வைரல்!

யானைக்குட்டி ஒன்று வீண் வம்பு இழுத்துவிட்டு பின்னர், அந்த நபர் என்ன செய்துவிடுவாரோ என்று பயந்து ஓடிப்போய் ஒளிந்துகொள்ளும் நகைச்சுவையான காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Written by - RK Spark | Last Updated : Aug 30, 2022, 07:26 AM IST
  • கேமராவை பார்த்து ஓடி வரும் யானைக்குட்டி.
  • பின்பு தலைதெறித்து ஓடுகிறது.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
வம்பிழுத்துவிட்டு பயந்தோடும் யானைக்குட்டி! க்யூட் வீடியோ வைரல்! title=

யானைக்குட்டிகள் பார்க்க தான் உருவ அளவில் பெரியதாக தோன்றுமே தவிர மற்றபடி பச்சிளம் குழந்தைகளை போல தான் அவற்றின் செயல்களும் அமைந்திருக்கும்.  அவை செய்யும் குறும்புத்தனங்களை நாம் அமைதியாக உற்றுநோக்கினால் அதிலுள்ள நகைச்சுவை உணர்வு நமக்கு புலப்படும், யானைக்குட்டிகளின் சேட்டைகள் நமது மனதுக்கு இதமளிக்கும் வகையில் இருக்கும்.  அந்த வகையில் இப்போது உங்கள் கவலைகளை நீக்கி மகிழ்ச்சியை அளிக்கும் விதமாக இணையத்தில் ஒரு வீடியோ பகிரப்பட்டு இருக்கிறது.  யானைக்குட்டி செய்யும் சேட்டை இப்போது  கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | கிஸ் கொடுத்த பாம்பு: பூனையின் வேற லெவல் ரியாக்ஷன், வைரல் வீடியோ

அந்த வீடியோவானது ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில் யானைகூட்டங்கள்  அதற்கான இரையை தேடிக்கொண்டு இருக்கின்றன.  அப்போது ஒரு யானைக்குட்டி மட்டும் இரையை தேடுவதை தவிர்த்துவிட்டு, வீண் வம்புக்கு செல்கிறது.  முதலில் புலி பதுங்குவது போல் மெதுவாக அடியெடுத்து வைத்து நடந்து வரும் யானைக்குட்டி திடீரென்று வேகமாக வந்து முன்னாள் நிற்பவரை பயமுறுத்துவது போல செய்து வம்பிழுக்கிறது.  பின்னர் அந்த நபர் தன்னை எதுவும் செய்துவிடுவாரோ என பயந்துகொண்டு வந்த வேகத்தில் திரும்பி ஓட்டம் பிடிக்கிறது, அதன் பிறகு ஒரு மரத்தின் பின்னால் சென்று ஒளிந்து கோபத்துடன் இந்த வீடியோ நிறைவடைகிறது.

 

இந்த வீடியோ பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருக்கிறது, கடந்த 28ம் தேதி இணையத்தில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோவை இதுவரை எழுபத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இணையவாசிகள் பார்த்து ரசித்திருக்கின்றனர்.  மேலும் இந்த வீடியோவிற்கு இதுவரை ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்துள்ளன மற்றும் பலர் சிரிப்பு எமோஜிகளை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | ‘ப்ப்ப்பா....பாம்பு’: இணையத்தை பற்ற வைக்கும் பாம்புகளின் காதல், வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News