ஆசையா ஸ்வீட் கொடுத்த மாப்பிள்ளை, வேற லெவலில் ட்விஸ்ட் கொடுத்த மணப்பெண்: வைரல் வீடியோ

மணமகன் மற்றும் மணமகள் தொடர்பான வீடியோக்களை இணையவாசிகள் விரும்பிப் பார்க்கிறார்கள். தற்போதும் இது போன்ற ஒரு வீடியோ வைரல் ஆகியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 6, 2022, 05:26 PM IST
ஆசையா ஸ்வீட் கொடுத்த மாப்பிள்ளை, வேற லெவலில் ட்விஸ்ட் கொடுத்த மணப்பெண்: வைரல் வீடியோ  title=

Viral Video: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் (Social Media) பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.  சமீப காலங்களில் திருமண நிகழ்வுகளின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மணமகன் மற்றும் மணமகள் தொடர்பான வீடியோக்களை இணையவாசிகள் விரும்பிப் பார்க்கிறார்கள். தற்போதும் இது போன்ற ஒரு வீடியோ வைரல் ஆகியுள்ளது. இதில் மணமகன் மற்றும் மணமகளின் நடவடிக்கைகளை பார்க்க மிக வேடிக்கையாக உள்ளன. 

இதைப் பார்ப்பவர்களால் இந்த வீடியோவிலிருந்து (Viral Video) பார்வையை அகற்ற முடியாது. இந்த வீடியோவில், மணமகனும் மணமகளும் திருமண மண்டபத்தில் அமர்ந்திருப்பதைக் காண முடிகின்றது. மணமகன் மணமகளுக்கு ஒரு இனிப்பை வழங்குகிறார். மீண்டும் மீண்டும் மணமகன் மணமகளுக்கு இனிப்பு அளிக்க முயற்சிப்பதால் மணமகள் கோபமடைகிறார். 

ALSO READ | Well of Death Challenge: சமூக ஊடகங்களில் வைரலாகும் மரண கிணறு சவால் வீடியோ

திருமண மண்டபத்தில் மணமகன் மீது கோபம் கொண்ட மணமகள் 

சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வரும் இந்த வீடியோ சில விநாடிகளையே கொண்டது. எனினும் இது இணையவாசிகளால் அதிகம் விரும்பப்பட்டு வருகின்றது. மணமகன் ஊட்ட விரும்பும் இனிப்பை மணமகள் சாப்பிட விரும்பவில்லை. மணமகன் மீண்டும் மீண்டும் சப்பிடச்சொல்லி தொந்தரவு செய்கிறார். இதன் பிறகு மணமகள் செய்யும் செயலை யாராலும் நம்ப முடியவில்லை. கோபமடைந்த மணமகள் மணமகன் காலில் நன்றாக கிள்ளி விடுகிறார். 

மணமகள் கிள்ளியதையடுத்து மணமகனின் முகம் போகும் போக்கு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த ரியாக்சன் பார்ப்பதற்கு படு சூப்பராக உள்ளதாக இணையவாசிகள் கூறி வருகின்றனர்.

அந்த கியூட்டான வீடியோவை இங்கே காணலாம்:

மணமகன் மற்றும் மணமகளின் இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் (Netizens) ஏராளமான கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். இந்த வீடியோவுக்கு கருத்து தெரிவித்த ஒரு பயனர், ‘இப்படி வலுக்கட்டாயமாக சாப்பிட வைக்கக்கூடாது’ என்று எழுதியுள்லார்.

‘லவ் மொமெண்ட்’ என ஒருவர் எழுத, மற்றொருவரோ, ‘உனக்கு இது தேவையா மணமகனே’ என கிண்டலடித்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. 

ALSO READ | கல்யாண பொண்ணா இருந்தா என்ன? நமக்கு சாப்பாடுதான் முக்கியம்!! வைரல் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News