பிரபல புகைப்பட பகிர்வு செயலியான Instagram-ல் இனி பயனர்கள் குரல் செய்தி அனுப்பலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது!
மொபைல் போன்களின் அங்கமாக மாறிவிட்ட WhatsApp-ல் பயனர்கள் எழுத்து, ஒலி, ஒளி வடிவில் உரையாடும் வசதி உள்ளது. இதன் காரணமாக பயனர்களிடன் நல்ல வரவேற்பினை பெற்ற இந்த செயலியால், இதைத்தொடர்ந்து வந்த செயலிகளும் தங்களது செயலிகளில் மேற்கண்ட வசதிகளை வழங்க முன்வந்தது.
அந்த வகையில் தற்போது பிரபல புகைப்பட பகிர்வு செயலியான Instagram-லும் குரல் செய்தி அனுப்பும் வசதியினை அறிமுகம் செய்ய தலைமையகம் முடிவு செய்துள்ளது.
WhatsApp-ஐ பொறுத்தமட்டில் பயனர்களுக்கு குரல் செய்தி அனுப்ப வேண்டும் எனில் முதலில் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர்களின் பெயரினை தேர்ந்தெடுத்து பின்னர் அவருக்கான செய்தி பக்கத்தில் குரல் செய்தி அனுப்ப வேண்டும்.
ஆனால் Instagram-ல் சற்று மாற்றாக, Instagram Direct பக்கத்தில் நேரடியாக microphone குறும்படத்தினை கிளிக் செய்து வாடிக்கையாளரின் குரல் செய்தியினை பதிவு செய்யலாம். பின்னர், தங்களுக்கு விருப்பமான நபர்களுக்கு இந்த செய்தியினை பகிரலாம். எனினும் இந்த குரல் செய்தியானது பயனர் உரையாடல் திரையில் Wav கோப்பாக காண்பிக்கப்படும் எனவும், ஒருமுறை ஒலிக்க செய்த பின்னர் மீண்டும் காண்பிக்கப்படாது எனுவும் இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.