நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் ஜோடியாக நடித்தவர் ரெஜினா. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவிற்கு கண்டநாள் முதல் படத்தின் மூலம் அறிமுகமானார்.
தற்போது, அவர் கௌதம் கார்த்திக் உடன் மிஸ்டர் சந்திரமௌலி படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தில் கார்த்திக், கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் 'மிஸ்டர் சந்திரமௌலி'. இப்படத்தை திரு இயக்குகிறார். 'நான் சிகப்பு மனிதன்' படத்துக்குப் பிறகு திரு இயக்கும் படம் 'மிஸ்டர் சந்திரமௌலி'. கார்த்திக், கவுதம் கார்த்திக், இயக்குனர் மகேந்திரன், இயக்குநர் அகத்தியன், ரெஜினா, வரலட்சுமி, சந்தோஷ், சதீஷ், ஜெகன், விஜி சந்திரசேகர், 'மைம்' கோபி, மனோபாலா ஆகியோர் நடித்து உள்ளனர். இப்படத்துக்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் இசையமைக்கிறார்.
சமீபகாலமாக இந்தியா முழுக்க நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் குறித்து பல தகவல்கள் வெளியாகிவருகிறது. தற்போது, நடிகை ரெஜினாவும் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியபோது.....!
சமீபத்தில் ஒரு முறை சென்னையில் முக்கிய தியேட்டர் அருகே தன் நண்பர்களோடு ரெஜினா நடந்து சென்றுள்ளார். அப்போது நேரத்தில் எதிரில் வந்த அடையாளம் தெரியாத ஒரு நபர் அவரின் உதடுகளை பிடித்து இழுத்தார். இந்த சம்பவம் எனக்கு மிகவும் அதிர்ச்சியை தந்தது.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர எனக்கு சில நிமிடங்கள் ஆனது. அதுமட்டும் இன்றி அந்த நபரை ரெஜினா கெட்ட வார்த்தையில் திட்டியுள்ளார். மேலும், அவரை பிடித்து அடித்து அனுப்பியிதாகவும் அண்மையில் அவர் கூறியுள்ளார்.