புதுடெல்லி: அணுகுண்டு உலகம் முழுவதையும் அழிக்கும் சக்தி வாய்ந்த பொருளாக கருதப்படும் நிலையில், அணு குண்டு பற்றி விஞ்ஞானிகள் அதிர்ச்சியூட்டும் கூற்றை கூறியுள்ளனர். பூமியை சிறுகோள்களிலிருந்து காப்பாற்ற அணுகுண்டுகள் பயன்படுத்தப்படலாம் என்று வெளிநாட்டு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். எதிர்காலத்தில் சிறு கோள்கள் பூமியை தாக்குவதை தடுக்க அணு குண்டுகளை பயன்படுத்துவதை விஞ்ஞானிகள் ஆதரித்துள்ளனர்.
சில காலமாக பூமிக்கு அருகில் சிறுகோள்கள் கடந்து செல்லும் சம்பவங்கள் குறித்த செய்தி உலகத்துக்கும் கவலை தரும் செய்தியாக உள்ளது. சிறு கோள்கள் பூமியில் மோதினால், அவை மனிதர்கள் உயிருக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறும் என கூறப்படும் நிலையில், எதிர்காலத்தில் ஒரு பெரிய சிறுகோள் பூமியுடன் மோதினால் என்ன நடக்கும் என்பதை அறிவதில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
ALSO READ | விண்வெளியில் திரைப்பட ஷூட்டிங்; வரலாறு படைக்கும் ரஷ்ய குழு..!!!
ஆக்டா ஆஸ்ட்ரோநாட்டிகாவில் (Acta Astronautica) என்னும் இதழில் வெளியிடப்பட்ட அறிக்கை
டைனோசர்களை பூமியிலிருந்து முற்றிலுமாக அழிந்து போன நிலையில், மனிதர்களுக்கும் இதே போன்ற ஒன்று நடக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள். இருப்பினும், ஊகங்கள் தவிர, உலகின் விஞ்ஞானிகள் பூமிக்கு அருகில் வரும் சிறுகோள்களை அகற்றுவதற்கான தொழில்நுட்பம் குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இதற்காக, சிறுகோள்கள் பூமியின் மீது மோதும் அச்சுறுத்தலை அகற்றுவதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்
விஞ்ஞானி பேட்ரிக் கிங் தலைமையிலான புதிய ஆராய்ச்சியில், சரியான நேரத்தில் அதிக ஆற்றலின் உதவியுடன், பூமியை தாக்க வரும் சிறுகோள்களை, அணுகுண்டின் உதவியுடன் சிறிய துண்டுகளாக உடைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ALSO READ | விண்வெளியில் ஒலித்த Fire Alarm; விண்- உலா போன வீரர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR