காரா கடற்கரையில் பிரம்மாண்ட பனிக்கடல் யானைகளின் வரத்து!!! ஆச்சரியத்தில் ரஷ்ய விஞ்ஞானிகள்

பனிக்கடல் யானைகள் கடல் பயணம் மேற்கொண்டுள்ளதை ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது மிகவும் அரிய நிகழ்வு என்பதால் அதிசயமான விஷயமாக இருக்கிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 7, 2020, 12:58 AM IST
  • வால்ரஸ் ஹால்அவுட்கள் பாரம்பரியமாக கடல் பனியை நகர்த்துவதில் வல்லவை.
  • சமீபத்திய தசாப்தங்களில் காரா கடலில் ’பனி இல்லாத பருவம்’ நீண்டதாகிவிட்டது.
  • பனிக்கடல் யானை இன,ம், அழிவின் விளிம்பு நிலையில் உள்ள விலங்கினங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது.
காரா கடற்கரையில் பிரம்மாண்ட பனிக்கடல் யானைகளின் வரத்து!!! ஆச்சரியத்தில் ரஷ்ய விஞ்ஞானிகள்  title=

பனிக்கடல் யானைகள் கடல் பயணம் மேற்கொண்டுள்ளதை ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது மிகவும் அரிய நிகழ்வு என்பதால் அதிசயமான விஷயமாக இருக்கிறது. அட்லாண்டிக் பிராந்தியத்தில், உயிரினங்களின் வாழ்விடங்கள் சுருங்கி வரும் சூழலில், மனித நடவடிக்கைகளால் விலங்குகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் பனிக்கடல் யானைகள் (Walrus) தென்படுவது ஆச்சரியமான விஷயம் தான்.
காரா கடலின் உறைந்த கடற்கரையில் ஆயிரக்கணக்கான விலங்குகள் இருப்பதை யமலோ-நெனெட்ஸ் தன்னாட்சி பிராந்திய அரசாங்கத்தின் (Yamalo-Nenets Autonomous Region government) பத்திரிகை சேவையின் தனித்துவமான ட்ரோன் காட்சிகள் காட்டியுள்ளன.
`வால்ரஸ் நதி' (Walrus river) என்று அழைக்கப்படும் ஆற்றின் இரு கரைகளிலும் இந்த விலங்குகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். முந்தைய தொல்பொருள் ஆய்வுகளின்படி, இந்த பகுதி சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு பனிக்கடல் யானைகள் வேட்டைக்காக பிரசித்தி பெற்றது. 
சமீபத்திய தசாப்தங்களில், அட்லாண்டிக் வால்ரஸ்கள் யமல் தீபகற்பத்தில் (Yamal peninsula) டஜன் கணக்கான இடங்களில் மட்டுமே காணப்பட்டன.
வால்ரஸ்கள் எனப்படும் பனிக்கடல் யானைகள் ஒன்றுகூடி, இனப்பெருக்கம் செய்து, சமூகமயமாக்கும் இடமான ஹால்அவுட் (haulout), தீபகற்பத்தின் தொலைதூர மூலையில் அமைந்துள்ளது. அந்த இடத்தில் கடந்த மாதம் 3,000 க்கும் மேற்பட்ட விலங்குகள் காணப்பட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த இடத்திற்கு ஹெலிகாப்டரில் மட்டுமே செல்ல முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வால்ரஸ் ஹால்அவுட்கள் பாரம்பரியமாக கடல் பனியை நகர்த்துவதில் வல்லவை.  ஆனால் காலநிலை சுழற்சிகள் ஏற்படுத்தும் தாக்கத்தால், பனிக்கடல் சுருங்கி வருவதாக கூறப்படுகிறது. அதோடு, எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு மற்றும் ஆர்க்டிக் கப்பல் போக்குவரத்து ஆகியவற்றால் விலங்குகளின் வாழ்விடங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன.

"பெண் மற்றும் ஆண் பனிக்கடல் யானைகளும், அவற்றில் வெவ்வேறு வயதினரின் குட்டிகளும் மேற்கொள்ளும் இந்த பயணம் தனித்துவமானது" என்று ரஷ்யாவின் அகாடமி ஆஃப் சயின்ஸின் மூத்த ஆர்க்டிக் ஆராய்ச்சியாளர் அலெக்ஸாண்டர் சோகோலோவ் (Aleksander Sokolov) கூறினார்.  
இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (ஐ.யூ.சி.என்) 2016 ஆம் ஆண்டில் இந்த பனிக்கடல் யானை இனத்தை  அழிவின் விளிம்பு நிலையில் உள்ள விலங்கினங்களில் ஒன்றாக பட்டியலிட்டுள்ளது.
20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சர்வதேச அளவில் வால்ரஸ்களை வேட்டையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அதுவரை, பனிக்கடல் யானைகளில் தந்தங்களுக்காக அவை மிகவும் அதிக அளவில் வேட்டையாடப்பட்டன. 
தற்போது பனிக்கடல் யானைகள் கண்டறியப்பட்டு இருப்பது ஒரு நேர்மறையான அறிகுறி என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஆனால் மிகக் குறைவான தகவல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. விஞ்ஞானி போல்டுனோவின் கூற்றுப்படி, சமீபத்திய தசாப்தங்களில் காரா கடலில் ’பனி இல்லாத பருவம்’ நீண்டதாகிவிட்டது.
விஞ்ஞானிகள் வால்ரஸ்களின் டி.என்.ஏ (DNA) மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். அவற்றில் பலவற்றை செயற்கைக்கோளுடன் இணைத்து, ஆராச்சிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆராய்ச்சி பல்வேறு பரிணாமங்களில் உலகிற்கு பயனளிப்பதாக இருக்கும் என நம்பப்படுகிறது.  

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News