இந்திய வானியலாளர்கள்'பேய் போன்ற' தோற்றம் கொண்ட ஒரு விண்மீனைக் கண்டுபிடித்துள்ளனர்.
விண்மீன் மண்டலத்தில் நட்சத்திரங்கள் அதிகம் உருவாகின்றன. பிரகாசமான விண்மீன்கள் இருப்பதால் இந்த மங்கலான விண்மீன் இதற்கு முன்பு காணப்படவில்லை.
பெங்களுருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அஸ்ட்ரோபிசிக்ஸ் ஆராய்ச்சியாளர்கள் குழு மற்றும் பாரிஸில் உள்ள பிரான்ஸ் கல்லூரியைச் சேர்ந்த பிரெஞ்சு வானியலாளர் ஆகியோர் இந்த விண்மீனைக் கண்டுபிடித்தனர்.
ஆராய்ச்சி அணியில் ஜோதி யாதவ், மௌசுமி தாஸ் மற்றும் சுதன்ஷு பார்வே மற்றும் ஃபிராங்கோயிஸ் கோம்ப்ஸ் ஆகியோர் இருந்தனர்.
இந்த கண்டுபிடிப்பு குறித்த அறிவிப்பை இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மங்கலான விண்மீன் திரள்கள் பிரபஞ்சத்தில் 15 சதவீதத்தை உருவாக்குகின்றன.
மங்கலான விண்மீன் திரள்களை, குறைந்த மேற்பரப்பு ஒளிர்வு விண்மீன் திரள்கள் அல்லது தீவிர பரவலான விண்மீன் திரள்கள் என்றும் அழைக்கிறோம்.
இந்த விண்மீன் திரள்கள் தங்களைச் சுற்றியுள்ள இரவு வானத்தை விட குறைந்தது பத்து மடங்கு மங்கலானவை. குறைந்த வட்டு அடர்த்தி காரணமாக விண்மீன் திரள்கள் தோற்றத்தில் மங்கலாக உள்ளன.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட விண்மீன் பூமியில் இருந்து சுமார் 136 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
"என்ஜிசி 6902 ஏ, முன்பு அறியப்பட்ட விண்மீன் மற்றும் மங்கலான நட்சத்திரங்களை உருவாக்கும் பகுதிகளை ஸ்பெக்ட்ராவில் உள்ள உமிழ்வுக் கோடுகளைப் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் அளந்தனர். இந்த நட்சத்திரத்தை உருவாக்கும் பகுதிகள் சுமார் 136 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதைக் கண்டறிந்தனர்.
NGC 6902A இன் நீளம் 825 மில்லியன் ஒளியாண்டுகள் ஆகும். இதன் பொருள் பரவலான நீல உமிழ்வு முன்புற விண்மீன் மண்டலத்தில் இருந்து வந்தது" என்று இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
‘வானியல் மற்றும் வானியற்பியல்’ இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR