புதுவை நியமன MLA-க்கள் விவகாரம் - சபாநாயகர் திட்டவட்டம்!

புதுவை நியமன MLA-க்கள் விவகாரத்தில் தீர்ப்பு விவரங்களை ஆய்வு செய்த பின்னரே முடிவு எடுக்க முடியும் என சபாநாயகர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்!

Last Updated : Mar 24, 2018, 12:46 PM IST
புதுவை நியமன MLA-க்கள் விவகாரம் - சபாநாயகர் திட்டவட்டம்! title=

புதுவை நியமன MLA-க்கள் விவகாரத்தில் தீர்ப்பு விவரங்களை ஆய்வு செய்த பின்னரே முடிவு எடுக்க முடியும் என சபாநாயகர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்!

புதுவை சட்டமன்றத்துக்கு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நியமன MLA-க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரின் நியமனம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தது. 

இந்த தீர்ப்பினை அடுத்து வரும் 26-ஆம் நாள் நடைபெறவுள்ள சட்டமன்ற கூட்டத்தில் தாங்களும் கலந்துகொள்வோம் என்று சாமிநாதன் எம்.எல்.ஏ. அறிவித்தார். இதுகுறித்து பேசுவதற்காக நியமன MLA-க்கள் 3 பேரும் தலைமை செயலாளர் அஸ்வனிகுமாரை சந்தித்தனர். 

அதைத் தொடர்ந்து பிற்பகல் 1 மணியளவில் சட்டசபைக்கு வந்த அவர்கள் நேராக சபாநாயகரின் அறைக்கு சென்று சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

இச்சந்திப்பிற்கு பின்னர் சபாநாயகர் வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். இச்சந்திப்பின் போது செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்...

"தீர்ப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வமான உத்தரவு எதுவும் நீதிமன்றத்தில் இருந்து எனக்கு இன்னும் வரவில்லை. என்னை சந்தித்த சாமிநாதன், சங்கர், செல்வ கணபதி ஆகியோர் தீர்ப்பு விவரத்தை என்னிடம் தெரிவித்தனர். அதன் நகல் வந்ததும் என்னிடம் தருவதாக தெரிவித்தனர்.

இந்த விஷயத்தில் நான் மட்டுமே எந்த முடிவும் எடுத்துவிட முடியாது. தீர்ப்பு விவரங்கள் குறித்து அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்த பின்னரே எந்த முடிவும் எடுக்க முடியும்." என தெரிவித்துள்ளார்!

Trending News