பள்ளி மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் கட்டாயம் -CBSE!

பள்ளி மாணவர்கள் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் கட்டாயம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது...!

Last Updated : Apr 23, 2018, 04:39 PM IST
பள்ளி மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் கட்டாயம் -CBSE!  title=

பள்ளி மாணவர்கள் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் கட்டாயம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது...! 

மாணவர்கள் தங்களை புத்துணர்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்துகொள்ளவும் புதிய திட்டங்களை செயல்படுத்து வருகிறது. பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளை எதிர்கொள்ளும் தகுதியை மாணவர்கள் பெறுவதற்கு தினமும் விளையாட்டு நேரம் ஒதுக்கப்படவேண்டும் என சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

இந்த புதிய விதிமுறையில் விளையாட்டு பயிற்சி முறைகள் குறித்தும், அவற்றை செயல்படுத்துவது எப்படி என்பது குறித்த 150 பக்க விதிமுறைகளை வெளியிட்டுள்ளது சிபிஎஸ்இ கல்வி வாரியம். 

இதன் படி அனைத்து பள்ளிகளிலும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தினமும் விளையாட்டு நேரம் ஒதுக்கப்படும் என்றும், இதற்கு தனியாக விளையாட்டு ஆசிரியர்கள் தேவை இல்லை என்றும் அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களை ஊக்குவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. 

விதிமுறைகளில் குறிப்பிட்டுள்ள விளையாட்டு மற்றும் பயிற்சிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும், அந்த மதிப்பெண்கள் பொதுத்தேர்வை எழுதுவதற்கான தகுதிக்கான மதிப்பெண்ணாக எடுத்துக்கொள்ளப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. 

Trending News