உலக இதய தினம்: இதயம் நல்லா இருக்க இந்த ஐந்து உணவுகள் போதும்

இதயம் ஆரோக்கியமாக இருந்தால் தான் உடல் முழுமையும் ஆரோக்கியமாக இருக்கும். உங்கள் உணவில் இதயத்துக்கு நன்மை செய்யும் உணவுகளை சேர்ப்பது அவசியம். இன்று உலக இதய தினத்தை முன்னிட்டு இதய மருத்துவர்கள் தங்களது ஆரோக்கியத்தை அதிகரிக்க தங்கள் சமையலறையில் வைத்திருக்கும் முக்கியமான ஐந்து பொருள்கள் குறித்து பார்க்கலாம்.

 

1 /5

ஆலிவ் எண்ணெய்: ஆலிவ் எண்ணெய் ஆரோக்கியமானது. ஆலிவ் ஆயிலில் குறைவான கலோரி கொண்டவை. இதில் ஆரோக்கியமான மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைவாக கொண்டிருக்கிறது. இதனால் இதய நோய் அபாயத்தை குறைக்க செய்கிறது.

2 /5

​சால்மன் மீன்: இது இதய நோயாளிகளுக்காக பரிந்துரைக்கும் முக்கியமான உணவு . மேலும் சால்மன் மீன் உங்களுக்கு பிடிக்கவில்லையெனில் நீங்கள் வேறு கடல் உணவுகள் அல்லது கொழுப்பு நிறைந்த ஒமேகா -3 அடங்கியுள்ள மீன்களை எடுத்துகொள்ளலாம். அவை இதய ஆரோக்கியத்துக்கு நன்மை செய்ய கூடியவை. ஆய்வுகளின் படி ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள உணவுகள் நாள்பட்ட அழற்சியை குறைக்கிறது. இதனால் இதய ஆபத்து காரணங்கள் குறைக்க உதவும். 

3 /5

இலை கீரைகள்: இலை கீரைகள் மற்றூம் இலை காய்கறிகள் நார்ச்சத்து நிறைந்தவை. இதய நோய் தடுப்புக்கு உதவக்கூடிய ஃபோலேட் எனப்படும் முக்கியமான வைட்டமின் பி கொண்டவை. இவை எளிமையாக கிடைக்க கூடிய இவை இதயத்துக்கு பாதுகாப்பும் அளிக்கும் என்பதால் எப்போதும் உங்கள் உணவில் சேர்க்க முயற்சி செய்யுங்கள்.

4 /5

​பீன்ஸ் வகையறாக்கள்: பீன்ஸ் வகைகள் இலைகளை போன்றே பீன்ஸும் இதயத்துக்கு நன்மை செய்பவை. ஃபோலேட், ஆக்ஸிஜனேற்றிகள், மெக்னீசியம் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது. இது ரத்த அழுத்தத்தை குறைக்க செய்யும். இதனால் இதய நோய் மற்றும் பக்கவாதம் உண்டாக்கும் அபாயத்தையும் குறைக்க செய்கிறது.

5 /5

​கொட்டைகள் மற்றும் விதைகள்: கொட்டைகள் மற்றும் விதைகள் உட்கொள்வது உடலுக்கு ஊட்டச்சத்தை கொடுக்கும். நட்ஸ் மற்றும் விதைகள் இதய ஆரோக்கியமான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், நோயை எதிர்க்கும் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் கொழுப்பை குறைக்கும்.