கூகிள் சமீபத்தில் ஒரு புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் மூலம் இணைய இணைப்பு ((Internet Connection), இல்லாதபோது கூட சாதனங்களை இணைக்கலாம். அதாவது, மொபைலில் நெட்வொர்க் இணைப்பு இல்லாவிட்டாலும், வைஃபை தொடர்பான அனைத்து வேலைகளும் இந்த செயலியின் உதவியுடன் செய்யப்படும்.
இந்த செயலி Wifi Aware நெறிமுறையைப் பயன்படுத்தி இணைய இணைப்பு இல்லாமல் திரைப்பட டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வகை செய்கிறது என்று கூகிள் கூறுகிறது. பெரிய அளவிலான தரவுகளை பகிர இந்த செயலியை பயன்படுத்தலாம்.
கூகிள் இந்த செயலியை WiFiNanScan என்ற பெயரில் பிளே ஸ்டோரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், இது டெவலப்பர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான ஆராய்ச்சி, மற்றும் சோதனைக்கான சாதனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது
இந்த செயலியின் மூலம் இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கு இடையேயான சரியான தூரத்தையும் அளவிட முடியும். இருப்பினும், இரண்டு தொலைபேசிகளும் 1 முதல் 15 மீட்டர் வரம்பில் இருக்கும்போது மட்டுமே இது சாத்தியமாகும். இது மட்டுமல்லாமல், இந்த செயலியின் உதவியுடன், ஆவணங்களை இண்டெர்நெட் இல்லாமலேயே பிரிண்டரருக்கு பிரிண்ட் செய்ய அனுப்ப முடியும்.
இந்த செயலி ஆண்ட்ராய்டு 8.0 மற்றும் அதற்கு மேற்பட்ட OS பதிப்பின் அனைத்து சாதனங்களுடனும் இயங்கும், மேலும் ப்ளூடூத் போன்ற எந்தவிதமான தொடர்பும் இல்லாமல் பரஸ்பரம் கனெக்ட் ஆக இருக்க வகை செய்கிறது.
இந்த செயலி முற்றிலும் பாதுகாப்பானது என கூகிள் கூறுகிறது. இந்த பயன்பாட்டின் உதவியுடன், பயனர்கள் புளூடூத் மற்றும் வைஃபை இணைப்பு இல்லாமல் செய்திகளையும் தரவையும் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள முடியும்.