Suryakumar Yadav: இந்திய அணியில் இடம் பிடித்த ஒரு வருடத்தில் 'மிஸ்டர் 360' ஆக மாறிய சூர்யகுமார் யாதவ் இன்று கோடிகளில் சம்பாதிக்கிறார்
சூர்யகுமார் யாதவ்வின் கிரிக்கெட் வாழ்க்கையில் பல கஷ்டங்கள் நிறைந்திருந்தாலும் இன்று கோடிக்கணக்கான சொத்துகளுக்கு சொந்தக்காரர். கடந்த ஆண்டு தான் இந்திய அணிக்காக அறிமுகமான சூர்யகுமார் யாதவ் தற்போது டி20 கிரிக்கெட்டில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக உள்ளார்.
மேலும் படிக்க | Mr. 360 : பக்கத்துல வந்துட்டிங்க தம்பி... - சூர்யகுமாரை பாராட்டித் தள்ளிய ஏபிடி
சூர்யகுமார் யாதவ் 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாடினார். அதே நேரத்தில், அதே ஆண்டில் அவர் தனது முதல் ஒருநாள் போட்டியை இலங்கைக்கு எதிராக விளையாடினார்.
ஊடக அறிக்கைகளின்படி, சூர்ய குமார் யாதவ், 4 மில்லியன் டாலர் அதாவது சுமார் 32 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கு சொந்தக்காரர். அதே சமயம் ஆண்டு வருமானம் சுமார் ரூ.8 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
சூர்யகுமார் யாதவ் 2013 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் பங்கேற்று வருகிறார். அவர் தனது முதல் சீசனில் விளையாட 10 லட்சம் ரூபாய் மட்டுமே பெற்றார், ஐபிஎல் 2022 இல் மும்பை இந்தியன்ஸ் அவருக்கு 8 கோடி ரூபாய் கொடுத்தது.
சூர்யகுமார் யாதவ் ட்ரீம்11 மற்றும் ஃப்ரீ ஹிட்டின் பிராண்ட் அம்பாசிடர் ஆவார்.
இது தவிர, அவர் சரின் ஸ்போர்ட்ஸ், மாக்சிமா வாட்ச்கள் மற்றும் பல பிராண்டுகளை விளம்பரப்படுத்துகிறார். இந்த விளம்பரங்கள் மூலம் சூர்யகுமார் கோடிக்கணககன பணத்தை சம்பாதிக்கிறார்.