பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் - வெளியான முக்கிய தகவல்

Pongal Gift | பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் தமிழ்நாடு அரசு ஏன் அறிவிக்கவில்லை என்ற முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

Pongal Gift Cash | தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்பு அறிவித்தாலும், ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கவில்லை. அது ஏன் என்ற முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

1 /8

தமிழ்நாட்டில் வெகு விமரிசையாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அதற்காக தமிழ்நாடு அரசு ஆண்டு தோறும் பொங்கல் பரிசு தொகுப்பு (Pongal Gift) மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் வழங்கும். கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு ஆண்டு தோறும் இந்த தொகை வழங்கப்பட்டு வந்தது.திமுக அரசு பொறுப்பேற்ற பிறகும்கூட பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.   

2 /8

ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பரிசு அறிவித்த தமிழ்நாடு அரசு ஆயிரம் ரூபாய் ரொக்கம் அறிவிக்கவில்லை. அது ஏன் என்ற கேள்வி பெரும்பாலான மக்கள் மத்தியில் உள்ளது. உண்மையில் பொங்கல் பரிசு தொகுப்பு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த பொங்கல் பரிசை சுமார் 2.20 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பெறுகின்றனர். இதற்கான டோக்கன் விநியோகம் கூட ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கியது. 

3 /8

ஜனவரி 9 ஆம் தேதி முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு விநியோகம் தொடங்க உள்ளது. ஒரு கிலோ பச்சரிசி, முழுக் கரும்பு, சர்க்கரை இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படுகிறது. அத்துடன் இலவச வேட்டி சேலையும் கொடுக்கப்பட உள்ளது. ஆனால் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுமா? என்றால் இப்போதைய சூழலில் அந்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பில்லை.

4 /8

இது குறித்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கொடுத்திருக்கும் விளக்கத்தில் தமிழ்நாடு அண்மையில் மிகப்பெரிய பேரிடர்களை சந்தித்துவிட்டது. மத்திய அரசு அந்த பேரிடர்களை கையாள எந்த நிதியும் கொடுக்கவில்லை. இதனால் ஆயிரம் ரூபாய் ரொக்கம் பணம் பொங்கல் பரிசு தொகுப்பில் இடம்பெறவில்லை என கூறினார். 

5 /8

அவரின் இந்த விளக்கம் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு உடன் ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் வழங்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகிவிட்டது. அதேநேரத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் மாதம் ஆயிரம் ரூபாய் தொகை கலைஞர் உரிமைத் தொகை திட்டம் மூலம் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். ஆண்டு ஆயிரம் ரூபாய் என்பதை கடந்து தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 12000 ரூபாய் வழங்கிக் கொண்டிருக்கிறது.

6 /8

பொங்கல் பரிசு தொகுப்பும் இதே பயனாளிகளுக்கு தான் வழங்கப்படுகிறது. அதனால் ஒரே பயனாளிகள் தமிழ்நாடு அரசின் இரண்டு விதமான திட்டங்களில் நிதியுதவி பெறுகின்றனர். நிதி நிலை சிறப்பாக இருந்திருந்தால் தமிழ்நாடு அரசு இந்த ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்குவதை நிறுத்தியிருக்காது. 

7 /8

மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை சரியாக கொடுத்தால் இதுபோன்ற மக்கள் நல திட்டங்களை தமிழ்நாடு அரசு செய்ய தயாராகவே இருக்கிறது. ஆனால், தமிழ்நாடு அரசு கேட்கும் நிதி, வரிப்பகிர்வு முழுமையாக கிடைப்பதில்லை. 

8 /8

அதேநேரத்தில் பெண்கள் மத்தியிலும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், அது திமுக அரசுக்கு எதிரான மிகப்பெரிய அதிருப்தியாகவும் இல்லை. படித்தவர்கள் அதிகம் இருக்கும் மாநிலம் என்பதால் பொங்கல் பரிசு தொகுப்பு உடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்படாததற்கான காரணத்தை புரிந்து கொண்டிருக்கின்றனர்.