இந்தியாவின் டாப் 8 பணக்கார மாநிலங்கள்! தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா?

Richest State In India 2024 Top 8 List : இந்தியாவில் இருக்கும் 28 மாநிலங்களில் பணக்கார மாநிலங்கள் சில இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா? 

Richest State In India 2024 Top 8 List : கோடிக்கணக்கான மக்கள் வசிக்கும் நாடாக விளங்குகிறது, இந்தியா. வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடுகளுள் ஒன்றாக இருக்கும் இந்தியா, பல நாடுகளுக்கு பன்முகத்தன்மையில் முன்னோடியாக விளங்குகிறது. இந்த நாட்டில், ஒவ்வொரு மாநிலத்தில் வசிக்கும் மக்களும் ஒவ்வொரு வகையில் இருப்பர். இதில், ஒரு சில மாநிலங்கள் மிகவும் ஏழ்மை நிலையிலும், ஒரு சில மாநிலங்கள் அதிக லாபம் பார்க்கும் மாநிலமாகவும் விளங்குகின்றன. அப்படி பணக்கார மாநிலமாக விளங்குபவற்றின் லிஸ்டை இங்கு பார்ப்போமா?

1 /8

1.மகாராஷ்டிரா: தொழில், சேவைகள், விவசாயம் என அனைத்திலும் முன்னோடியாக விளங்கும் மாநிலம் இது. இதன் GDP மொத்தம் 20 ட்ரில்லியன் ஆகும்.

2 /8

2.தமிழ் நாடு: தமிழ்நாட்டின் GDP மட்டும் 20 ட்ரில்லியன் என கூறப்படுகிறது. இங்கு ஜவுளி, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவை அதிகம். அது மட்டுமன்றி சுற்றுலாவும் ஒரு முக்கிய வருமான ஆதாரமாக விளங்குகிறது. 

3 /8

3.உத்தரபிரதேசம் :  உத்தர பிரதேசம், விவசாய ரீதியாக நன்கு வளர்ந்த மாநிலமாகும். தொழிற்சாலைகள் இங்கு அதிகம் இருப்பதால் வருமானத்திற்கும் குறைவில்லை. 

4 /8

4.குஜராத்: குஜராத், தொழிற்சாலைகள் அதிகம் இருக்கும் மாநிலங்களில் ஒன்றாகும். ரசாயனம், பெட்ரோ கெமிக்கல்கள் உள்ளிட்டவற்றை இந்த மாநிலம் தயாரிக்க்கிறது. இது, இந்த மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. 

5 /8

5.கர்நாடகா: ஐடி மற்றும் உயிரி தொழில்நுட்பம் (biotechnology) உள்ளிட்டவற்றில் சிறந்த மாநிலமாக விளங்குகிறது கர்நாடகா. குறிப்பாக, பெங்களூரு மூலம் மட்டும் இந்த மாநிலத்திற்கு அதிக வருமானம் வருவதாக கூறப்படுகிறது. 

6 /8

6.மேற்கு வங்காளம்: மேற்கு வங்காள மாநிலத்தில் விவசாயம், தொழிற்சாலைகள் உள்ளிட்டவை பெரும் பொருளாதார ஆதாரமாக விளங்குகிறது. 

7 /8

7.ராஜஸ்தான்: ராஜஸ்தான், விவசாயம் மற்றும் சுற்றுலாத்துறைக்கு பிரபலமான மாநிலமாகும். நிலக்கரி சுரங்கம், தொழிற்சாலைகள் உள்ளிட்டவை இவற்றிற்கு பொருளாதார ஆதாரமாக விளங்குகிறது. 

8 /8

8.ஆந்திர பிரதேசம்: ஆந்திராவில், அரிசி, தானியங்கள் மற்றும் கடல் உணவுகள் பெரும் பொருளாதார ஆதாரமாக விளங்குகின்றன. இந்த மாநிலத்தின் வருடாந்திர GDP மொத்தம் 11.3 டிரில்லியன் என கூறப்படுகிறது.