Gold Hallmarking Charges: பண்டிகை காலம் துவங்கியுள்ளதால், தங்க நகை கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. நாட்டில் தங்க ஹால்மார்க்கிங் விதிகள் அமலுக்கு வந்த பிறகு, 6 இலக்க HUID ஹால்மார்க்கிங் கொண்ட தங்கம் மட்டுமே விற்க அனுமதிக்கப்படுகிறது.
உங்களிடம் ஹால்மார்க் இல்லாத பழைய நகைகள் இருந்தால், அவற்றில் 916 ஹால்மார்க்கிங் செய்துக் கொள்ளலாம்.
தங்கத்தின் மதிப்பு அதிகரிக்கும், என்றும் குறையாது என்ற நம்பிக்கை மற்றும் நல்ல முதலீடு என்பதால், சேமிக்கும் பணத்தில் ஒரு பகுதியை நகைகளாக வாங்கும் பழக்கம் இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் உண்டு
ஹால்மார்க் செய்யப்பட்ட தங்கம் சுத்தமானதாக கருதப்படுகிறது. ஹால்மார்க்கிங் என்று அழைக்கப்படும் தர சோதனை செய்து தங்கத்தின் தூய்மை குறிக்கப்படுகிறது.
தங்கம் வாங்கும்போது, சிலர் தான் முதலீட்டிற்காக வாங்குகின்றன, பெரும்பாலும் பெண்கள் ஆபரணமாகவே வாங்க விரும்புகின்றனர்
இந்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள BSI ஏஜென்சிகள் மூல்ம் தங்கத்தின் தூய்மைக்கு சான்றளிக்களிக்கப்படுகிறது
ஹால்மார்க் செய்யும் பொறுப்பை இந்திய தர நிர்ணய கழகம் மேற்கொள்கிறது. நாடு முழுவதும் உள்ள இந்த கழகத்தின் அலுவலகம் தான் ஹால்மார்க் சோதனையை செய்கிறது.
உங்களிடம் ஹால்மார்க்கிங் இல்லாத பழைய நகைகள் இருந்தால், அவற்றினி தூய்மையை சரிபார்த்து ஹால்மார்க் செய்துக் கொள்ளுங்கள்
ஹால்மார்க்கிங் கட்டணம் நகைகளுக்கான ஹால்மார்க்கிங் கட்டணம் - தங்க நகைகளுக்கு ரூ.45 + ஜிஎஸ்டி வெள்ளி நகைகளுக்கு ரூ.35+ ஜிஎஸ்டி
ஹால்மார்க்கிங் விதிகள் நடைமுறையில் இருந்தாலும், ஹால்மார்க் செய்யப்படாத உங்கள் பழைய நகைகளை விற்கலாம் என்று BIS கூறுகிறது.