வாட்ஸ்அப்பில் சேட் செய்யும் போதே நீங்கள் எளிதாக பணத்தை அனுப்பக்கூடிய எளிய முறை தான் வாட்ஸ் அப் பேமெண்ட் முறை
வாட்ஸ்அப் பேமெண்ட் சேவை மூன்று மாதங்களுக்கும் மேலாக நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆன்லைன் மோசடி அதிகரித்து வரும் காலத்தில் நாம் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அதனை பயன்படுத்தும் முறையையும், எச்சரிக்கை நடவடிக்கைகளையும் தெரிந்து கொள்ளலாம்.
நீங்கள் பணம் அனுப்ப விரும்பும் நபரின் சாட் விண்டோவை ஓபன் செய்யவும். இப்போது இணைப்பு, அதாவது அட்டாச்மெண்ட் என்ற ஐகானைக் கிளிக் செய்யவும். முதல் முறையாக இதை பயன்படுத்துபவர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டும்.
வாட்ஸ்அப் பேமெண்டை பயன்படுத்துவதற்கு முன்பு, இந்த யுபிஐ கட்டணத்திற்கு நீங்கள் பதிவு செய்ய வேண்டும். உங்கள் UPI கேட்வேயில் வங்கி விவரங்களை உறுதிப்படுத்தவும்.
நீங்கள் பதிவுசெய்ததும், நீங்கள் பணம் அனுப்ப விரும்பும் நபரின் சாட் விண்டோவை திறந்து, அட்டாச்மெண்ட் ஐகானை கிளிக் செய்து , அதில தோன்றும் வாட்ஸ்அப் பேமெண்டை கிளிக் செய்து, தொகையை உள்ளிடவும். உங்கள் UPI PIN ஐ உள்ளிடவும். தேர்ந்தெடுக்கப்பட்ட தொடர்பு எண்ணுக்கு பணம் அனுப்பப்படும்.
இந்த விண்டோவை பயன்படுத்தும் போது எச்சரிக்கை தேவை.வாட்ஸ்அப் பேமெண்டை பயன்படுத்தும்போது, ஆன்லைன் மோசடிகளில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க சில விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, செயலியில் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு விவரங்களை ஒரு போதும் கொடுக்கக் கூடாது
தற்போது ஆன்லைன் மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆன்லைன் வங்கி விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வாட்ஸ்அப் உங்களிடம் வங்கி விவரங்களைக் கேட்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.