SBI அளிக்கும் அதிரடி offer: வங்கிக்கு செல்லாமலேயே 20 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம்

SBI loan offer: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களின் வசதியை அதிகரிக்க அவ்வப்போது பல புதிய திட்டங்களைக் கொண்டு வருகிறது. தற்போது இந்த வங்கி ஒரு சிறப்பு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

நாட்டின் மிகப் பெரிய கடன் வழங்குநரான SBI தனது வாடிக்கையாளர்களுக்கு எளிய வழியில் தனிப்பட்ட கடன்களை வழங்கி வருகிறது. இந்த வசதியைப் பெற வாடிக்கையாளர்கள் ஒரு மிஸ்டு கால் கொடுத்தாலோ அல்லது ஒரு எஸ்எம்எஸ் அனுப்பினாலோ போதும்.

1 /5

இந்த வசதியின் மூலம் SBI வாடிக்கையாளர்கள் குறைந்த வட்டி விகிதத்தில் ரூ .20 லட்சம் வரை கடன் பெறலாம். Source: PTI  

2 /5

SBI கடன் வசதியைப் பெற விரும்புவோர் கூடுதல் தகவலுக்கும், தொடர்பு மையம் மூலம் விண்ணப்பிக்கவும் 1800-11-2211 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் SBI தொடர்பு மையத்திலிருந்து அழைப்பைப் பெற 7208933142 என்ற எண்ணில் மிஸ்ட் கால் கொடுக்கலாம். அல்லது 7208933145 என்ற எண்ணில் “PERSONAL” என்று எஸ்எம்எஸ் அனுப்பலாம். Source: Reuters

3 /5

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா SBI-யின் எக்ஸ்பிரஸ் கிரெடிட் தனிநபர் கடன் மூலம் விரைவான ஒப்புதல் கடன் மற்றும் உடனடி வழங்கலை அளிக்கிறது. Source: Reuters

4 /5

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி, இந்த வசதியுடன், தினசரி குறைப்பு இருப்பு மீதான வட்டி, குறைந்த செயலாக்கக் கட்டணங்கள், குறைந்தபட்ச ஆவணங்கள், ஜீரொ ஹிட்டன் காஸ்ட், இரண்டாவது கடனுக்கான வசதி போன்ற அம்சங்களை வழங்கி வருகிறது. Source: Reuters

5 /5

"திருமணமோ அல்லது விடுமுறையோ, திட்டமிடப்படாத அவசரநிலையோ அல்லது திட்டமிடப்பட்ட செலவோ, உங்கள் அனைத்து தேவைகளுக்கும் எஸ்பிஐயின் எக்ஸ்பிரஸ் கிரெடிட் தனிநபர் கடன் மூலம் குறைந்தபட்ச ஆவணங்களுடன் விரைவான ஒப்புதல் மற்றும் உடனடி கடன் விநியோகத்தைப் பெறுங்கள்" என்று SBI குறிப்பிட்டுள்ளது. Source: Reuters