வாட்ஸ்அப் மூலம் பிளைட் டிக்கெட் புக் பண்ணலாம்..! எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்

விமான டிக்கெட் முன்பதிவு இப்போது இன்னும் எளிமையாகிவிட்டது. உங்கள் வாட்ஸ்அப் மூலம் ஈஸியாக புக் செய்துவிட முடியும்.

விமான டிக்கெட் முன்பதிவு செய்வது முன்பை விட தற்போது அதிக எளிதாகிவிட்டது. இந்தியாவின் பிரபல விமான சேவை நிறுவனமான இண்டிகோ தற்போது ஏ.ஐ. புக்கிங் அசிஸ்டண்ட் சேவையை அறிமுகம் செய்து இருக்கிறது. 

1 /7

6Eskai என்று அழைக்கப்படும் இந்த சேவையை கொண்டு பயனர்கள் வாட்ஸ்அப் சாட் மூலம் விமான டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இந்த ஏ.ஐ. அசிஸ்டண்ட் சேவையை ரைஃபி எனும் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது.  

2 /7

இந்த ஏ.ஐ. மென்பொருள் உங்களுக்கு டிராவல் ஏஜெண்ட் போன்று உதவிகரமாக இருக்கும். விமான டிக்கெட் முன்பதிவு செய்வது, போர்டிங் பாஸ் பெறுவது, விமானங்கள் வருகை குறித்த விவரங்களை அறிந்து கொள்வது மட்டுமின்றி பயணம் தொடர்பான உங்களது சந்தேகங்களுக்கு 6Eskai பதில் அளிக்கும் திறன் கொண்டுள்ளது.

3 /7

இண்டிகோ நிறுவனத்தின் புதிய ஏ.ஐ. அசிஸ்டண்ட் கொண்டு மிக எளிமையாக வாட்ஸ்அப் சாட் செய்தே பயணம் தொடர்பான சந்தேகங்களுக்கு தீர்வு காண முடியும்.   

4 /7

மேலும், இந்த சேவை தற்போது ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் மற்றும் இந்தி என பிராந்திய மொழிகளிலும் பயன்படுத்தும் வசதி கொண்டிருக்கிறது. புதிய சேவையை பயன்படுத்த பயனர்கள் வாட்ஸ்அப்-இல் +91 7065415858 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பினாலே போதும்.  

5 /7

கூகுள் கிளவுட்-இன் மிகப்பெரிய லாங்குவேஜ் மாடல்களால் இயக்கப்படும், 6Eskai உங்களது விமான பயணத்தை இதுவரை இல்லாத அளவுக்கு சுலபமானதாக மாற்றிவிடும்.   

6 /7

அதிநவீன பொறியியல் தீர்வுகளை கொண்டுள்ள 6Eskai உங்களது உணர்வுகளை புரிந்து கொண்டு, விமான டிக்கெட் முன்பதிவு தொடர்பான உரையாடல்களை மகிழ்ச்சிகரமான ஒன்றாக மாற்றும்.

7 /7

டிக்கெட் முன்பதிவு மட்டுமின்றி 6Eskai உங்களுக்கான சலுகைகளை பெற உதவுவது, விரும்பிய இருக்கையை தேர்வு செய்வது, பயணத்தை திட்டமிடுவது என ஏராளமான சேவைகளை வழங்குகிறது. இதோடு, 6Eskai உங்களது பயண ஏஜெண்ட் உடன் பேசவும் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.