சரித்திரம்... இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு... தினமும் கோடிக்கணக்கான நிகழ்வுகள் நிகழ்ந்தாலும், அவற்றில் ஒருசில மட்டுமே சரித்திரத்தில் இடம் பெறும் அப்படி வரலாற்றின் பொன்னேடுகளில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வுகள் என்றென்றும் நினைவில் நீங்கா இடம் பிடிக்கின்றன...
வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், முன்பு எப்போதும் நடைபெறாத நிகழ்வுகளின் பதிவுகள் பல இருக்கும். சரித்திரம் என்றும் காலத்தின் சாட்சியாக நிற்கிறது. சரித்திரத்தில் நிலைத்து நிற்கும் சில முக்கிய நிகழ்வுகளை நினைவூட்டினால், பல படிப்பினைகள் கிடைக்கும்....கடந்த காலத்தில் இந்த நாளில் நடந்த என்ற சில முக்கிய பதிவுகள்…
Also Read | Hostilities: தொடர்கதையாகும் போர் வன்முறை காசாவில் 35 பேர், இஸ்ரேலில் 5 பேர் பலி
1718: உலகின் முதல் இயந்திர துப்பாக்கிக்கு James Puckle காப்புரிமை பெற்றார்
1940: முதல் மெக்டொனால்டின் துரித உணவு விற்பனை நிலையம் கலிபோர்னியாவின் சான் பெர்னார்டினோவில் திறக்கப்படுகிறது.
1948: எகிப்து, சிரியா, டிரான்ஸ்ஜோர்டான் மற்றும் ஈராக் ஆகியவை இஸ்ரேலை ஆக்கிரமித்தன
1988: சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளைத் திரும்பப் பெறத் தொடங்கியது
1991: எடித் க்ரெசன் பிரான்சின் முதல் பெண் பிரதமரானார்
2021: செவ்வாய் கிரகத்தில் சீனா ஒரு வரலாற்று விண்கலத்தை தரையிறக்கியது