உடல் எடையை குறைக்கணுமா? இந்த டீ குடிங்க போதும்!

தேநீர் பிரியர்கள் பலரும் இருக்கையில், சில வகையான தேநீர் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவும் என்கிற செய்தி அவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமையும்.

1 /5

எடை குறைப்பு என்று வந்ததுமே முதலில் நம் நினைவுக்கு வருவது க்ரீன் டீ தான்.  க்ரீன் டீயில் கொழுப்பு மற்றும் கலோரிகளை எரிக்க உதவும் ஃபிளவனாய்டுகள் உள்ளது.  எனவே உடல் எடை குறைப்பில் க்ரீன் டீ சேர்ப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.  

2 /5

குறைந்த பதப்படுத்தப்பட்ட தேயிலை வகைகளில் ஒன்றுதான் ஒயிட் தேயிலை.  இந்த உயிர் தேயிலையை வைத்து தயாரிக்கப்படும் ஒயிட் தேநீர் கொழுப்புகளை கரைக்கவும், புதிய கொழுப்பு செல்கள் உருவாகாமல் தடுக்கவும் உதவுகிறது.  

3 /5

காமெலியா சினென்சிஸ் எனப்படும் தாவரத்திலிருந்து பெறப்படும் இலையை கொண்டு தயாரிக்கப்படும் ஊலாங் தேநீர் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறப்படுகிறது.  

4 /5

பிரபலமாக பலரும் பருகும் பிளாக் டீ உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது.  பிளாக் டீ வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி உடலில் தங்கியுள்ள அதிகப்படியான கலோரிகளை குறைக்க உதவுகிறது.  

5 /5

உடல் எடை குறைப்பில் செம்பருத்தி தேநீரும் பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது.  இந்த தேநீர் குடிப்பதால் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைந்து உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.