உடல் எடையை குறைக்க நீங்கள் தீவிரமாக முயற்சி செய்யும் போது, சில தவறுகள் காரணமாக உங்கள் எடை குறைவதற்கு பதிலாக அதிகரிக்கலாம். அதனால், உங்கள் முயற்சி அனைத்தும் வீணாகி விடும்.
காலை உணவில் அதிக புரத உணவை எடுத்துக் கொள்ளாவிட்டால், உடல் எடையை குறைப்பது கடினம். இந்த பழக்கம் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். காலையில் அதிக புரதச்சத்து உள்ள உணவை உட்கொள்வது கலோரிகளை எரிக்க உதவுகிறது. புரத உணவை பசியை குறைப்பதோடு, மன அழுத்தம் மற்றும் சோர்வு நீங்கும்.
நீங்கள் மிகவும் பசியாக உணரும் வரை நீங்கள் சாப்பிடவில்லை என்றால், இந்த பழக்கம் உடல் எடையை குறைக்க உங்களுக்கு பெரும் தடையாக மாறும். நீண்ட நேரம் பட்டினி கிடப்பதும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது. இது ஹார்மோன்களின் சமநிலையையும் சீர்குலைக்கிறது. சில நேரங்களில் உணவைத் தவிர்க்கும் சமயத்தில், அதன் பிறகு நம்மை அறியாமல் அதிகமாக சாப்பிட்டு விடுவோம். இது உங்கள் கலோரி உட்கொள்ளலை அதிகரிக்கிறது. சரியான நேரத்தில் அளவான உணவை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்.
இரவு நேர உணவை தாமதமாக சாப்பிட்டால், அதுவும் எடை குறைப்பதில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். மதியம் ஹெவியான உணவை உண்ணுங்கள். இரவில் சூப் மற்றும் சாலட் போன்ற லைட்டான உணவை சாப்பிடுங்கள்.
மது அருந்துவதும் எடை கூடுவதற்கு வழிவகுக்கும். இதில் கலோரிகளின் அளவு அதிகமாக உள்ளது. கலோரிகள் நிறைந்த பொருட்களைக் குடிப்பதன் மூலம், உங்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்காது என்பதோடு, ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணும் ஆசை அதிகரிக்கிறது.
நீங்கள் அடிக்கடி சோடா குடித்தால், உங்கள் எடை குறையாது, மாறாக அதிகரிக்கும். இந்த வகை பானத்தில் சர்க்கரையின் அளவு மிக அதிகம். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும்.