இந்த ஆண்டு தீபாவளி வாரம் எப்படி இருக்கும்? அன்னை லட்சுமியின் ஆசி பெறும் ராசிகள்

November 6 - 12 Astrology Prediction In Tamil: நவம்பர் 6 முதல் 12 வரையிலான வாராந்திர ராசிபலன்...  மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என 12 ராசிகளுக்கான வார ராசிபலன் இது...

1 /13

இந்த ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த அற்புத தினம் மட்டுமல்ல, தீபாவளி வரும் வாரத்தில் எந்தெந்த ராசிகளுக்கு என்ன ராசிபலன் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.  

2 /13

நெருக்கமானவர்களின் சந்திப்பு ஏற்படும். உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கன்னி ராசியினருக்கு பாகப்பிரிவினை சார்ந்த முயற்சிகள் கைகூடும். விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் ஏற்படும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். 

3 /13

புதிய அனுபவம் கிடைக்கும். ரிஷப ராசிக்காரர்களின் சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த முயற்சிகள் கைகூடிவரும். ஒப்பந்தப் பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும்

4 /13

புத்திசாலித்தனமாகச் செயல்படும் வாரம் இது. விருச்சிக ராசிக்காரர்கள் தீபாவளி வாரத்தில் விருப்பமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். புதிய தொடர்பு கிடைக்கும்

5 /13

தனுசு ராசியினருக்கு வெளியூர் பயணங்கள் கைகூடிவரும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் பொறுப்பறிந்து நடப்பது நல்லது. 

6 /13

மீன ராசிக்காரர்கள் சில அனுபவங்களால் மனதளவில் மாற்றம் உண்டாகும். பிறமொழி பேசும் மக்களிடம் கவனம் வேண்டும். ஆன்மிகப் பணிகளில் தெளிவு ஏற்படும். உத்தியோகப் பணிகளில் விட்டுக்கொடுத்துச் செல்லவும்

7 /13

துலாம் ராசிக்காரர்களுக்கு தீபாவளி வாரத்தில் உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். காப்பீட்டுப் பணிகளில் மேன்மை ஏற்படும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள் 

8 /13

சிம்மம் ராசிக்காரர்களுக்கு மனதளவில் இருந்து வந்த கவலைகள் குறையும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். தடைப்பட்ட சில பணிகளை முடிப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுமையுடன் செயல்படவும். விலகிச் சென்றவர்களைப் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும்

9 /13

மிதுன ராசியினர், புதிய நபர்களின் தன்மையையறிந்து பழகவும்.  வாக்குறுதிகள் கொடுப்பதைக் குறைத்துக் கொள்ளவும். வியாபாரப் பணிகளில் நிதானம் வேண்டும். சக ஊழியர்களிடத்தில் அமைதியுடன் செயல்படவும்

10 /13

மகர ராசியினர், கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பார்கள். சகோதரர்களின் வழியில் நன்மை உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் ஏற்படும்.

11 /13

கடக ராசியினருக்கு தீபாவளி வாரத்தில் உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் உயர்வான சூழல் அமையும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும்

12 /13

மேஷ ராசியினருக்கு தீபாவளி வாரத்தில் நண்பர்களால் ஆதாயம் அதிகரிக்கும். சேமிப்பு சார்ந்த விஷயங்களில் நாட்டம் உண்டாகும். வேலையாட்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகத்தில் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

13 /13

தீபாவளி வாரத்தில் சஞ்சலமான சிந்தனைகளைக் குறைத்துக் கொள்ளவும். பணிபுரியும் இடத்தில் சில மாற்றங்கள் உண்டாகும், அனுசரித்துச் சென்றால் நிம்மதியாக இருக்கலாம்