தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூரில் நிறைய சுற்றுலா தளங்கள் உள்ளன. இங்குள்ள சில சுற்றுலாத் தலங்கள் அனைவருக்கும் தெரிந்தவை என்றாலும், பலருக்கும் தெரியாத இடங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
வைதேகி நீர்வீழ்ச்சி நரசிபுரம் கிராமத்தைச் சுற்றியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் வைதேஹி அருவி அமைத்துள்ள்ளது. இயற்கையை ரசிப்பதற்கும், தண்ணீரில் விளையாடுவதற்கும் இது ஒரு சிறந்த இடமாக இருப்பதால் பலரும் இங்கு செல்கின்றனர்.
கோவை குற்றாலம் அருவி சிறுவாணிக்கு அருகில் அமைந்துள்ளது இந்த அழகிய கோவை குற்றாலம் அருவி. சுத்தமான காற்றையும் தண்ணீரின் சத்தத்தையும் அனுபவிக்க மக்கள் இங்கு செல்கிறார்கள்.
குரங்கு நீர்வீழ்ச்சி பொள்ளாச்சி நகருக்கு வெளியே குரங்கு நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. ஏராளமான மரங்களுக்கும், மலைக்கும் இடையில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. நிறைய குரங்குகள் இங்கு வாழ்வதால் இது குரங்கு நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படுகிறது.
சிறுவாணி அணை சிறுவாணி அணை அந்த பகுதிகளில் பெரிய நீர் தடுப்பாக உள்ளது, இது அருகிலுள்ள நகரங்களில் உள்ள மக்களுக்கு குடிநீர் வழங்க உதவுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் சிறுவாணி என்ற இடத்திற்கு அருகில் கட்டப்பட்டுள்ளது.
சிங்காநல்லூர் ஏரி கோயம்புத்தூரில் உள்ள சிங்காநல்லூர் ஏரியில் உங்களால் வாத்துகள் மற்றும் பறவைகளை அதிகளவில் பார்க்க முடியும். மாலை நேரத்தில் இயற்கையை ரசிக்கவும், வேடிக்கை பார்க்கவும், படகு சவாரி செய்வும் செல்லலாம்!
மருதமலை முருகன் கோயில் மேற்குத் தொடர்ச்சி மலையின் நடுவில் உள்ள மருதமலையில் அமைத்துள்ளது அருள்மிகு முருகன் கோவில். இங்கு முருகப்பெருமானை தரிசிக்கவும், இயற்கை அழகை காணவும் மக்கள் வருகின்றனர்.