அப்பப்பா என்ன வெயில் முடியல ஃபிரிட்ஜ்குள்ள போயி உக்காந்துக்கலாம்போல இருக்குனு நினைக்காதவங்க இருக்க முடியாது. பலர் வெயிலுக்கு பயந்துட்டு ஏசி ரூம விட்டு வெளிலையே வரது இல்ல. காலநிலை மாற்றத்தால இந்திய அளவுல வெப்பத்தின் தாக்கம் இந்த ஆண்டு அதிகமாவே காணப்படுது. குறிப்பா டெல்லிய பொருத்தவர வெப்பத்தின் அளவு 49.2 டிகிரி செல்சியஸ் வர எட்டி இருக்கு. இந்த நிலைல பலரும் குளிர்ச்சியான காலநிலை உள்ள இடங்களுக்குபோக விரும்புவாங்க. அப்படி செலக்டிவா சில் சில் கூல் கூல்னு ஒரு ஐந்து இடங்கள பார்க்கலாம்.
லேஹ், யூனியன் பிரதேசமாக உள்ள லேஹ் லடாக்கில் அமைந்துள்ள லேஹ் குளிர்ச்சியான காலநிலை உள்ள ஒரு பாலை வனம் என்றே கூறலாம். புதுமண தம்பதிகளுக்கு மட்டும் அல்ல இயற்கையை அனுபவிக்க வேண்டும் என நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த இடம் மிக சிறந்த பகுதி.
பஹல்காம், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த பகுதி பனி பகுதியாக மட்டும் இல்லாமல் அழகியலை தனக்குள் கொண்டுள்ளது. மிகவும் மன அழுத்தத்துடன் உள்ளவர்கள் கூட அங்கு சென்றால் புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது என ஏ.ஆர் ரஹ்மான் இசைக்கு பாடகர்களாக மாறிவிடுவார்கள்.
டார்ஜீலிங், மேற்கு வங்காள மாநிலத்தின் வடகோடியில் அமைந்துள்ள இந்த இடம் சுற்றுலா பயணிகளை கவரும் என்பதில் சந்தேகம் இல்லை. இங்கு இயக்கப்படும் டார்ஜீலிங் ஹிமாலயன் ரயில்வே உலக அளவில் புகழ் பெற்றது. ஏராளமான ஹாலிவுட் திரைப்படங்களில் இடம் பெற்றுள்ள இந்திய மலைநகரம் எனும் பெருமையும் டார்ஜீலிங் சுற்றுலா தலத்திற்கு உள்ளது.
நைனிடால், உத்தரகாண்ட் மாநிலத்தில் குமாவோன் பகுதியில் அமைந்துள்ள இந்த இடம் இயற்கையை ரசிக்கும் கண்களுக்கு விருந்தாகவே அமையும் அங்கு இருக்கக்கூடிய குளிர்ச்சியான காலநிலைக்கு நைனிடால் லேக் மிக முக்கிய காரணமாக உள்ளது.
மணாலி, வடக்கு இமாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த பகுதி ஒரு மலை வாசஸ்தலம் ஆகும். தேவர்கள் வசிக்கும் பூமி’ எனப்படும் குலு மாவட்டத்தின் ஒரு அங்கமாக உள்ள இந்த மணாலி மாநிலத்தலைநகரான சிம்லாவிலிருந்து 250 கி.மீ தூரத்தில் உள்ளது. மிகவும் அழகான இயற்கை சூழலை கொண்ட இந்த இடம் சுற்றுலா செல்ல மிகவும் சிறந்த இடமாக உள்ளது.
Next Gallery