இந்தியில் ரீ-மேக் ஆகிறது விஜய் நடித்த ‘தெறி’ திரைப்படம்..! யார் ஹீரோ தெரியுமா..?

விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த தெறி திரைப்படம் இந்தியில் ரீ-மேக் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Theri Hindi Remake: விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த தெறி திரைப்படம் இந்தியில் ரீ-மேக் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

1 /7

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருந்த படம் தெறி. தமிழில் வெளியாகி செம ஹிட் அடித்தது. 

2 /7

இந்த படம் இந்தியில் ரீ-மேக் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்க இருக்கிறாராம். 

3 /7

விஜய்யின் கதாப்பாத்திரம் போல இவர் தெறி பட ரீமேக்கிற்காக போட்டோஷூட் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

4 /7

இந்தி தெறி படத்தினை மருத் கேத்தனி என்பவர் டைரக்டு செய்கிறார். 

5 /7

தெலுங்கில் உருவாகியுள்ள  உஸ்டாத் பகத் சிங் எனும் படமும் தெறி படத்தின் ரீ-மேக்தான் என கூறப்படுகிறது. இதில் பவன் கல்யாண் நடித்துள்ளார். 

6 /7

வருண் தவான் இந்த போலிஸ் கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக இருப்பார் என ரசிகர்களிடையே கருத்து நிலவுகிறது. 

7 /7

இந்தியில் வெளியாகும் தெறி படத்தை அட்லீ இயக்குகிறாராம், அது மட்டுமன்றி, இப்படம் அடுத்த வருடம் ஐ.பி.எல் சீசனிற்கு பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.