முள்ளம்பன்றி vs சிறுத்தை: காட்டில் பல வகையான விலங்குகள் காணப்படுகின்றன. சில விலங்குகள் மிகவும் ஆபத்தானவை, சிறுத்தைகளும் அவற்றில் ஒன்று. இருப்பினும், ஒரு சிறுத்தை முள்ளம்பன்றியிடம் தோற்றது என்றால் நம்ப முடிகிறதா...
சில நாட்களுக்கு முன்பு, வனவிலங்கு புகைப்படக் கலைஞர் மரியட் லேண்ட்மேன் தென்னாப்பிரிக்காவின் க்ருகர் தேசிய பூங்காவில் இருந்தார். அவருக்கு சிறுத்தை முள்ளம்பன்றிக்கு இடையிலான சண்டை காட்சியை படமெடுக்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது.
முள்ளம்பன்றிகள் முட்கள் நிறைந்த சருமத்திற்கு பெயர் பெற்றவை. சிறுத்தையிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள அதே முட்களைப் பயன்படுத்தியது. சிறுத்தை தாக்குதலை எதிர்கொள்ள, இந்த முட்கள் நிறைந்த தோல் அதற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
சிறுத்தையால் முள்ளம்பன்றியின் முட்கள் தாக்குதலை நீண்ட நேரம் தாங்க முடியவில்லை. இந்த சண்டை 90 நிமிடங்களுக்கு நீடித்தது. சிறுத்தையால் தாக்குபிடிக்க முடியவில்லை
90 நிமிட சண்டையில், சிறுத்தை இறுதியில் தனது தோல்வியை ஒப்புக் கொண்டு திரும்பியது. புகைப்படம் எடுத்தவர், இது போன்ற வித்தியாசமன அனுபவம் தனக்கு எங்குமே கிடைத்ததில்லை எனக் கூறினார்.