2025ல் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும்! அமித் ஷாவின் ஆருடம்

5 trillion USD economy: உத்தரகாண்ட் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை சுட்டிக்காட்டி பேசினார்  

பிரதமர் தலைமையிலான இந்திய அரசு, தொலைநோக்கு தலைமையின் காரணமாக கடந்த ஒரு தசாப்தத்தில் இந்தியா அனைத்து துறைகளிலும் அதிவேகமாக வளர்ந்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்தார்

1 /7

2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்து தெரிவித்தார். உத்தரகாண்ட் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டின் மதிப்பாய்வு கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.  

2 /7

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் தொலைநோக்கு தலைமையின் காரணமாக கடந்த ஒரு தசாப்தத்தில் இந்தியா அனைத்து துறைகளிலும் அதிவேகமாக வளர்ந்துள்ளது என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்

3 /7

உலகம் இன்று இந்தியாவை நம்பிக்கையுடன் பார்க்கிறது. 2014 முதல் 2023 வரை இந்தியா உலகின் 11வது இடத்திலிருந்து ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

4 /7

இந்தியா சுதந்திரமடைந்த 75 ஆண்டுகளில் நாடு இதற்கு முன் ஒருபோதும் இவ்வளவு பெரிய வளர்ச்சியை கண்டதில்லை என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்.  

5 /7

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமை மற்றும் அவரது பார்வையே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு காரணம் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறினார்

6 /7

காலநிலை மாற்றத்திற்கு எதிரான இயக்கத்தை மோடி வழிநடத்தி வருகிறார், அவர் தனது மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உலகின் மந்தமான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கிறார் என்று அமித் ஷா தெரிவித்தார். அதோடு, பயங்கரவாதமற்ற உலகத்திற்கான சர்வதேச பிரச்சாரத்தை வழிநடத்துகிறார் பிரதமர் என்றும் அமித் ஷா தெரிவித்தார்  

7 /7

ஜி-20 இல், தில்லி பிரகடனம் ராஜதந்திர முன்னணியில் இந்தியாவின் பெரிய சாதனை என்று அவர் கூறினார், இது பல தசாப்தங்களாக இந்தியாவின் சாதனையை உலகம் நினைவில் கொள்ளும் வகையில் இருப்பதாக இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்