யூரிக் அமிலத்தின் அளவு உடலில் அதிகரிப்பது உடலில் பல ஆபத்துக்களை ஏற்படுத்தக் கூடும். குறிப்பாக ஆண்களுக்கு யூரிக் அமிலம் அதிகரிப்பது கீல்வாதம், சிறுநீரகக் கற்கள் மற்றும் இதய நோய்கள் போன்றவற்றை ஏற்படுத்தலாம்.
உடலில் யூரிக் அமிலத்தின் அளவு ஆண்களுக்கு அதிகரித்தால் உடலில் பல வழிகளில் வெளிப்படும். எனவே இந்த பதிவில் அதிகளவு யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால் ஆண்களுக்கு அது எப்படி வெளிப்படும் என்று தெரிந்து கொள்ளலாம்.
சோர்வாகவும் சங்கடமாகவும் உணர்ந்தால் அது அதிக யூரிக் அமில அளவுகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
சருமத்தில் சிவத்தல், அரிப்பு ஏற்பட்டால் உடலில் யூரிக் அமில அளவு அதிகமாக இருப்பதைக் குறிக்கும்.
உடலில் அதிக யூரிக் அமில இருந்தால் கால்களிலும் விரல்களிலும் உணர்வின்மை மற்றும் கூச்ச உணர்வுகளை ஏற்படலாம்.
அதிக யூரிக் அமிலம் பிரச்சனை உள்ளவர்களுக்கு மூட்டுகளில் கடுமையான வலி மற்றும் விறைப்புத்தன்மைக்கு வழிவகுக்கும்.
பாதங்களில் சிவத்தல், சூடு மற்றும் வீக்கத்திற்கு உட்படுவது முதன்மையாக அதிக அளவு யூரிக் அமிலத்தைக் குறிக்கிறது.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.