Divorce: 18 ஆண்டுகள் வாழ்க்கைத்துணை! இனி நட்பே துணை... புதுமணமுறிவு தம்பதிகளின் புகைப்படங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் விவாகரத்து விவகாரம் திரையுலகில் பரபரப்பாக  பேசப்பட்டு வருகிறது.

திரையுலகினர் மற்றும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இந்த அறிவிப்பில், 18 வருடங்கள் நண்பர்களாக, துணையாக, பெற்றோர்களாக வாழ்ந்தோம்.  தற்பொழுது நாங்கள் ஒன்றாக பிரிய உள்ளோம். எங்களது இந்த பிரிவை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று தம்பதிகள் ஒற்றுமையாகக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

1 /6

இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா பிரிந்துவிட முடிவு செய்தனர்.

2 /6

ஐஸ்வர்யா - தனுஷ் தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இனி குழந்தைகள் யாருடன் இருப்பார்கள் என்பது தெரியவில்லை.

3 /6

ஐஸ்வர்யாவின் தங்கை செளந்தர்யாவுக்கும் முதல் திருமணம் கசந்து போனதால், விவாகரத்து ஆனது குறிப்பிடத்தக்கது. பிறகு இரண்டாவது திருமணம் நடைபெற்றது

4 /6

நட்சத்திர தம்பதிகளின் விவாகரத்து தொடர்பான தகவல்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன.

5 /6

ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இனி, பிரிந்த இந்த தம்பதிகள் நண்பர்களாக தொடர்வார்கள் என்று கூறப்படுகிறது.

6 /6

18 வருடங்கள் நண்பர்களாக, துணையாக, பெற்றோர்களாக வாழ்ந்தோம்.  தற்பொழுது நாங்கள் ஒன்றாக பிரிய உள்ளோம்.  எங்களை நாங்கள் புரிந்து கொள்ள இந்த பிரிவை ஏற்படுத்தியுள்ளோம்.  எங்களது இந்த பிரிவை ஏற்றுக்கொள்ளுங்கள்