NH17: கோவா-கர்நாடகா கடற்கரை நெடுஞ்சாலை; வியக்க வைக்கும் காட்சிகள்

கோவா-கர்நாடகா  கடற்கரை நெடுஞ்சாலை: 187 KM நீளம் கொண்ட NH17 நெடுஞ்சாலையில் ஒருபுறம் அரேபிய கடல் கடற்கரையும் மறுபுறம் மேற்கு தொடர்ச்சி மலையும் உள்ளது, இது இந்தியாவின் மிக அழகிய நெடுஞ்சாலைகளில் ஒன்றாகும்.

1 /4

மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்  நிதின் கட்கரி கோவா-கராந்தகா நெடுஞ்சாலையின் NH17 பிரிவின் வியப்பூட்டும் படங்களைப் பகிர்ந்துள்ளார். 

2 /4

இந்த நெடுஞ்சாலையின் ஒருபுறம் அரேபிய கடல் கடற்கரையையும் மறுபுறம் மேற்கு தொடர்ச்சி மலைகளையும் கொண்டுள்ளது, இது இந்தியாவின் மிக அழகிய நெடுஞ்சாலைகளில் ஒன்றாக அற்புதமான இயற்கை காட்சிகளைக் கொண்டுள்ளது. 

3 /4

கோவா/கர்நாடகா எல்லையில் இருந்து குண்டாப்பூர்   NH-17 வரையிலான 4-வழிப்பாதைக்கான திட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது என்று கட்கரி ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

4 /4

இந்த திட்டம் மேற்கு மற்றும் தென்னிந்தியாவிற்கு இடையே ஒரு முக்கியமான கடற்கரை நெடுஞ்சாலை இணைப்பாகும். தற்போது 173 கிமீ (மொத்தப் பணிகளில் 92.42% நிறைவடைந்துள்ளது). இத் திட்டம் 2022 டிசம்பருக்குள் முடிக்கப்படும்.  என்று நிதின் கட்கரி கூறினார்.