நயன்தாராவை சம்பளத்தில் பின்னுக்கு தள்ளிய நடிகை யார் தெரியுமா?

நயன்தாரா மற்றும் திரிஷா தங்களது ரீ என்ட்ரி மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகள் அந்தஸ்தை பிடித்துள்ளனர்.

 

1 /6

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபத்தில் வெளியான ஜவான், இறைவன் போன்ற படங்களில் நடித்து இருந்தார்.  அடுத்து தனது 75வது படத்தில் நடித்து வருகிறார்.  

2 /6

நயன்தாரா தற்போது ஒரு படத்திற்கு 5 கோடி முதல் 10 கோடி வரை தனது கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு சம்பளம் வாங்கி வருகிறார்.  

3 /6

தனது ரீஎன்ட்ரியில் இருந்து நயன்தாரா பெரிய ஹீரோ படங்கள் மற்றும் தன்னை முன்னிலைபடுத்தும் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.  

4 /6

நயன்தாராவை போலவே த்ரிஷாவும் ரீஎன்ட்ரியில் அசத்தி வருகிறார்.  96, பொன்னியின் செல்வன், லியோ என பெரிய படங்களில் நடித்து மீண்டும் முன்னணி நடிகை இடத்தை பிடித்துள்ளார்.   

5 /6

இந்த வாரம் அவரது நடிப்பில் தி ரோட் படம் வெளியாக உள்ளது.  இந்நிலையில் திரிஷா சம்பளத்தில் நயன்தாராவை முந்தியுள்ளார் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

6 /6

அஜித்தின் விடாமுயற்சி மற்றும் கமலின் 234வது படத்திலும் திரிஷா கமிட் ஆகி உள்ளார் என்று கூறப்படுகிறது.