வலுவான பேட்டரி மற்றும் வேகமான சார்ஜிங் கொண்ட டாப்-5 ஸ்மார்ட்போன்கள் இவை...
புது தில்லி: ஸ்மார்ட்போன் வாங்கச் செல்லும் போது, முதலில் அந்த போனின் பேட்டரி மற்றும் கேமரா பற்றித் தெரிந்து கொள்கிறோம். வலுவான பேட்டரி மற்றும் வேகமான சார்ஜிங் செய்யும் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் இவை:
ALSO READ | Flipkart அதிரடி சலுகை: வெறும் ரூ. 4199-க்கு அட்டகாசமான ஸ்மார்ட் டிவி
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட Mi 11X 5Gயின் விலை ரூ.27,999. Qualcomm Snapdragon 870 மூலம் இயக்கப்படுகிறது, 120Hz E4 AMOLED டிஸ்ப்ளே மற்றும் 360Hz டச் மாதிரி கொண்டது. இது 4520mAh பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது. இதன் முதன்மை கேமரா 48MP என்பது குறிப்பிடத்தக்கது.
Realme X7 Max 5G ஆனது 6.43 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பு கொண்ட இதன் விலை 27,890 ரூபாய் ஆகும். இந்த ஃபோனில் 4500mAh பேட்டரி உள்ளது, 50W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட இந்த போனில், முதன்மையான கேமராவில் 64 மெகாபிக்சல்கள், இரண்டாவது கேமராவில் 8 மெகாபிக்சல்கள் மற்றும் மூன்றாவது கேமரா 2 மெகாபிக்சல்கள் உள்ளன.16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
OnePlus Nord 2 5G, 6.43-இன்ச் ஃப்ளூயிட் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 90Hz புதுப்பிப்பு வீதம், 1080 x 2400 பிக்சல்கள் கொண்டுள்ளது. 4500 mAh பேட்டரி கொண்ட இது, 65W வேகமான சார்ஜிங் கொண்டது. இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பு வசதி கொண்டது. இதன் விலை 29,999 ரூபாய் ஆகும். முதல் கேமரா 50 மெகாபிக்சல்கள், இரண்டாவது கேமரா 8 மெகாபிக்சல்கள் மற்றும் மூன்றாவது கேமரா 2 மெகாபிக்சல்கள் கொண்ட ஃப்ளூயிட் AMOLEDஇல், 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் இணைந்துள்ளது.
Vivo V21 5G இன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பு வகையின் விலை 29,990 ரூபாயாகும். 4000mAh பேட்டரி கொண்ட இது, 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இதில் 6.44 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. Vivo V21 5G ஸ்மார்ட்போனில், முதல் கேமராவில் 64 மெகாபிக்சல், இரண்டாவது கேமராவில் 8 மெகாபிக்சல் மற்றும் மூன்றாவது கேமராவில் 2 மெகாபிக்சல் உள்ளது.
Poco F3 GT 5G ஆனது 1080 x 2400 பிக்சல்கள் கொண்ட 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பு வகையின் விலை 28,999 ரூபாய் ஆகும். 5065mAh பேட்டரியைக் கொண்டுள்ள Poco F3 GT 5G, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டது. முதல் கேமரா 64 மெகாபிக்சல்கள், இரண்டாவது கேமரா 8 மெகாபிக்சல்கள் மற்றும் மூன்றாவது கேமரா 2 மெகாபிக்சல்கள் கொண்ட இந்த போனில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.