Major Tech Outages: உலக அளவில் வர்த்தம், போக்குவரத்து, ஐடி, செய்திகள் என பல துறைகளில் கணிணி பயன்பாடு ஆகியவற்றுக்கு ஆதாரமாக இருந்து வரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் செயலிழப்பு, சில மணி நேரங்களுக்கு உலகை ஸ்தம்பித்து போக வைத்தது.
இணைய பாதுகாப்பு நிறுவனமான கிரவுட்ஸ்டிரைக்கில் ( CrowdStrike) ஏற்பட்ட பாதிப்பு தான் இதற்கு காரணம் என கூறப்பட்ட நிலையில், உலகின் பெரும்பாலான வங்கிகள், விமான போக்குவரத்து துறை, ஐடி துறை, செய்தி நிறுவனங்கள், அமெரிக்காவின் 911 சேவை, லண்டன் பங்குசந்தை என பல முக்கிய தளங்கள் முடங்கியிருந்தன.
கணிணி இணையம் இல்லாமல் எதுவும் இல்லை என ஆகிவிட்ட நிலையில், தொழிநுட்பம் செயலிழந்தால், வர்த்தகம், சேவைத் துறை என பெரும்பாலான துறைகள் முடங்கும் அபாயம் உள்ளது . பெரும்பாலான தொழிநுட்ப கோளாறுகள் விரைவாக சரி செய்யப்பட்டாலும், சில கோளாறுகள் நீண்ட மணிநேரம் மற்றும் நாட்கள் கூட இருக்கும். இந்நிலையில், உலகை உலுக்கிய சில முக்கிய தொழில்நுட்ப கோளாறுகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
கிரவுட்ஸ்டிரைக்கில் ( CrowdStrike) ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மைக்ரோசாஃட்டில் இயங்கிய கணிணிகள் மற்றும் Microsoft 365 பயன்பாடுகள்/சேவைகளான Excel, Powerpoint, Defender மற்றும் இதர பல செயலிகள் பாதித்ததால் உலக அளவில், விமான சேவை, வங்கி சேவை, சேவை துறை உள்ளிட்ட பல சேவைகள் பாதிக்கப்பட்டன. விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் பரவலாக பயன்படுத்தப்படும் நிலையில், BSOD என்னும் BLUE SCREEN OF DEATH என்னும் ஸ்கீரின் தோன்றி கணிணிகள் முடங்கின.
மெட்டா நிறுவனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறும் உலகில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 2021 அக்டோபர் 4ம் தேதி மெட்டா செயலிழந்ததால் (Meta outage), இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்அப் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. இதைத் தவிர இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில், மேற்கூறிய இரண்டு மெட்டா பயன்பாடுகள் மற்றும் த்ரெட்கள் மற்றும் மெசஞ்சர் அனைத்தும் கிட்டத்தட்ட 2 மணிநேரம் செயலிழந்தன.
ஆல்பாபெட் நிறுவனத்துக்கு சொந்தமான Google சேவைகள் டிசம்பர் 14, 2020 அன்று ஒரு மணிநேரம் முடங்கின. இந்த செயலிழப்பு காரணமாக YouTube, Gmail மற்றும் Google ட்ரைவ் ஆகிய சேவைகள் முடங்கியது. உலகளவில் 12,000 யூடியூப் பயனர்கள் இதனால் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, யுகே ஆகிய நாடுகளில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன.
கடந்த 20022, ஆண்டு டிசம்பர் 28, 2022 அன்று X Corp செயலிழந்த நிலையில், உலகளவில் ஆயிரக்கணக்கான பயனர்கள் முன்னதாக டிவிட்டர் என்று அழைக்கப்பட்ட எக்ஸ் தளத்தை பயன்படுத்த முடியாமல் போனது. எலோன் மஸ்க் டிவிட்டரை வாங்கிய பின் ஏற்பட்ட மிக பெரிய தொழில்நுட்ப கோளாறு இதுவாகும்.
அமேசான் இணைய சேவைகள் முடக்கம்: 2017 ஆம் ஆண்டு Amazon Web Services செயலிழந்ததில், அமேசான் கிளவுட் சேவையை பயன்படுத்தும் கோடிக்கணக்கான இணையதள பயனர்கள் பாதிக்கப்பட்டனர். 2021 மற்றும் 2022ம் ஆண்டுகள் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக, Netflix மற்றும் Disney+ உள்ளிட்ட பல தளங்கள் பாதிக்கப்பட்டன.
கடந்த 2017ம் ஆண்டில், உலகக் அளவில் ஐடி செயலிழப்பு காரணமாக பிரிட்டிஷ் விமானத்தின் விமான சேவைகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டன. தகவல் தொழில்நுட்ப பராமரிப்பு பணியில் இருந்த ஒருவர், ஒரு முக்கிய தரவு மையத்தில் தடையில்லாமல் கொடுக்கப்பட்டு வந்த மின்சாரத்தை தற்செயலாக அணைத்ததே இந்த செயலிழப்புக்குக் காரணம் என பின்னர் கண்டறியப்பட்டது.
Edge DNS சேவையின் ஏற்பாட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2021ம் ஆண்டில் அகமாய் இணையதளங்கள் மற்றும் GitHub, Airbnb மற்றும் British Airways போன்ற சேவைகளைப் பாதித்தது. அதே போல், 2020ம் ஆண்டு ஏற்பட்ட கிளவுட்ஃப்ளேர் செயலிழப்பு என்பது இணையத்தால் மறக்க முடியாத மற்றொரு செயலிழப்பு ஆகும்.