Most Attractive BSNL Prepaid Plans: அண்மையில், ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து ஏர்டெல், வோடபோன் ஐடியா (Vi) போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் கட்டணங்களை அதிகரித்துள்ள நிலையில், BSNL வாடிக்கையாளர்களை ஈர்க்க, கட்டணம் குறைவான பல ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட், பயனர்களை மகிழ்விக்கும் வகையில், குறைந்த கட்டணம் அதிக நன்மைகள் கொண்ட பல ரீசார்கஜ் திட்டங்களை அறிவித்துள்ள நிலையில், சில மாதாந்திர, வருடாந்திர திட்டங்கள் உட்பட, சிறந்த ரீசார்ஜ் பிளான்களை அறிந்து கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.107 ரீசார்ஜ் பிளானில் 3GB டேட்டா கிடைக்கும். 35 நாட்களுக்கான வேலிட்டிட்டி கொண்ட இந்த திட்டத்தில், 200 நிமிட அழைப்பு வசதியும் உண்டு. ரூ.118 ரீசார்ஜ் பிளானில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 10GB டேட்டா கிடைக்கும். ஆனால், இதன் வேலிட்டிடி 20 நாட்கள் மட்டுமே.
பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.153 ரீசார்ஜ் பிளானில் 26GB டேட்டா கிடைக்கும். 26 நாட்களுக்கான வேலிட்டிட்டி கொண்ட இந்த திட்டத்தில், அன்லிமிடெட் வாய்ஸ் கால் அழைப்பு வசதியும் உண்டு. ரூ.199 ரீசார்ஜ் பிளானில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் நாள் ஒன்றுக்கு 2GB டேட்டா கிடைக்கும். ஆனால், இதன் வேலிட்டிடி 30 நாட்கள். இரண்டிலும் ஒரு நாளைக்கு 100 SMS அனுப்பலாம்.
பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.249 ரீசார்ஜ் பிளானில் நாள் ஒன்றுக்கு 2GB டேட்டா கிடைக்கும். 45 நாட்களுக்கான வேலிட்டிட்டி கொண்ட இந்த திட்டத்தில், அன்லிமிடெட் வாய்ஸ் கால் அழைப்பு வசதியும் உண்டு. ஒரு நாளைக்கு 100 SMS அனுப்பலாம்.
பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.347 ரீசார்ஜ் பிளானில் நாள் ஒன்றுக்கு 2GB டேட்டா கிடைக்கும். 54 நாட்களுக்கான வேலிட்டிட்டி கொண்ட இந்த திட்டத்தில், அன்லிமிடெட் வாய்ஸ் கால் அழைப்பு வசதியும் உண்டு. ஒரு நாளைக்கு 100 SMS அனுப்பலாம்.
பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.599 ரீசார்ஜ் பிளானில் நாள் ஒன்றுக்கு 2GB டேட்டா கிடைக்கும். 84 நாட்களுக்கான வேலிட்டிட்டி கொண்ட இந்த திட்டத்தில், அன்லிமிடெட் வாய்ஸ் கால் அழைப்பு வசதியும் உண்டு. ஒரு நாளைக்கு 100 SMS அனுப்பலாம்.
பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.1,198 ரீசார்ஜ் பிளானில் மாதம் ஒன்றுக்கு ஒன்றுக்கு 2GB டேட்டா கிடைக்கும். 365 நாட்களுக்கான வேலிட்டிட்டி கொண்ட இந்த திட்டத்தில், 300 நிமிட கால் அழைப்பு வசதியும் உண்டு. ஒரு மாதத்திற்கு 30 SMS அனுப்பலாம்.
பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.1,999 ரீசார்ஜ் பிளானில் 600 GB டேட்டா 365 நாட்களுக்கு கிடைக்கும். 365 நாட்களுக்கான வேலிட்டிட்டி கொண்ட இந்த திட்டத்தில், அன்லிமிடெட் கால் அழைப்பு வசதியும் உண்டு. ஒரு மாதத்திற்கு 100 SMS அனுப்பலாம்.
பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.2,399 ரீசார்ஜ் பிளானில் நாள் ஒன்றுக்கு 3GB டேட்டா 365 நாட்களுக்கு கிடைக்கும். ஒரு வருட வேலிட்டிட்டி கொண்ட இந்த திட்டத்தில், அன்லிமிடெட் கால் அழைப்பு வசதியும் உண்டு. ஒரு மாதத்திற்கு 100 SMS அனுப்பலாம்.