பெரும்பாலான சீன மொபைல் போன் நிறுவனங்கள் இந்திய மொபைல் போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதில் Xiaomi, Vivo, Oppo, Realme, Oneplus ஆகியவையும் அடங்கும். இவை தவிர, சாம்சங் இந்திய சந்தையில் நல்ல பிடிப்பை கொண்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், சியோமி, சாம்சங் மற்றும் ஒப்போ போன்ற பிராண்டுகள் இந்தியாவில் தங்கள் உற்பத்தி மற்றும் அசெம்பிளி யூனிட்களை அமைத்துள்ளன.
இந்திய அரசின் 'மேக் இன் இந்தியா' முன்முயற்சிகளின் கீழ், சர்வதேச நிறுவனங்கள் இங்கு தங்கள் யூனிட்களை நிறுவுவது மட்டுமல்லாமல், இந்திய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தங்களையும் மெற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட போனை வாங்க உங்களுக்கும் விருப்பம் இருந்தால், உங்களுக்கான டாப் 5 போன்களை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Realme 8 Pro 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்டது. இ-காமர்ஸ் இணையதளத்தில் அதன் விலையில் சிறிது வித்தியாசம் இருக்கலாம். இதன் சலுகை விலை, அமேசானில் ரூ .21,648, பிளிப்கார்டில் ரூ .19,999 ஆகும். 6.4 அங்குல திரை கொண்ட இந்த போனில் 4500 mAh பேட்டரி உள்ளது. முன் கேமரா 16MP மற்றும் பின்புற கேமரா 108MP + 8MP + 2MP + 2MP கொண்டது.
Xiaomi mi 10t pro, 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜுடன் வருகிறது. இது ஒரு 5 ஜி ஸ்மார்ட்போன் ஆகும். அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் இதன் சலுகை விலை ரூ .36,999 ஆகும். 6.67 அங்குல திரை கொண்ட இந்த போனில் 5000 mAh பேட்டரி உள்ளது. முன் கேமரா 20MP மற்றும் பின்புற கேமரா 108MP + 13MP + 5MP கொண்டுள்ளது.
Samsung Galaxy F12 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜுடன் வருகிறது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் அதன் சலுகை விலை ரூ 11,499 ஆகும். 6.51 அங்குல திரை கொண்ட இந்த போனில் 6000 mAh பேட்டரி உள்ளது. முன் கேமரா 8MP மற்றும் பின்புற கேமரா 48MP + 5MP + 2MP + 2MP கொண்டது.
Vivo IQoo 7 , 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜுடன் வருகிறது. அமேசானில் இதன் சலுகை விலை ரூ .31,990 ஆகும். 6.62 அங்குல திரை கொண்ட இந்த போனில் 4400 mAh பேட்டரி உள்ளது. முன் கேமரா 16MP மற்றும் பின்புற கேமரா 48MP + 13MP + 2MP கொண்டுள்ளது.
OnePlus Nord CE, 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜுடன் வருகிறது. இது 5 ஜி ஸ்மார்ட்போன். அமேசானில் அதன் சலுகை விலை ரூ. 22,999 ஆகும். 6.43 அங்குல திரை கொண்ட இந்த போனில் 4500 mAh பேட்டரி உள்ளது. முன் கேமரா 16MP மற்றும் பின்புற கேமரா 64MP + 8MP + 2MP கொண்டது. (குறிப்பு - பஜாஜ் ஃபின்சர்வ் இணையதளத்தில் ஆகஸ்ட் 2021 மேட் இன் இந்தியா ஸ்மார்ட்போன்களின் பட்டியலின் அடிப்படையில்)