கோலிவுட்டில் 100 கோடி வசூல் பெற்ற படங்களின் டாப் 10 ஹீரோக்கள்! முதல் இடத்தில் யார்?

Top 10 Kollywood Heroes 100 Crore Tamil Films : தமிழ் திரையுலகின் டாப் 10 கதாநாயகர்களையும், அவர்களின் 100 கோடி வசூல் செய்த படங்களின் லிஸ்டையும் இங்கு பார்ப்போம். 

Top 10 Kollywood Heroes 100 Crore Tamil Films : தமிழ் திரையுலக கதாநாயகர்கள் பலர், இதுவரை 100 கோடி வசூலித்த பல படங்களை கொடுத்திருக்கின்றனர். அதில், எந்தெந்த நடிகர்கள் டாப் 10 இடத்தில் இருக்கின்றனர் என்பதை இங்கு பார்ப்போம். லிஸ்டில் அஜித், விஜய், ரஜினி, தனுஷ் என பல்வேறு முன்னணி நடிகர்கள் இருக்கின்றனர். முழு விவரம் இதோ!

1 /11

100 கோடி வசூல் செய்த படங்களின் டாப் ஹீரோஸ்: தமிழ் திரையுலகை பொறுத்த வரை, கதைக்கும் அதற்கு ஏற்ற கதாப்பாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களுக்கும் பஞ்சமே இல்லை. அந்த வகையில், கோலிவுட்டிற்கு 100 கோடி வசூல் படங்களை கொடுத்த ஹீரோக்களின் லிஸ்டை இங்கு பார்ப்போம். 

2 /11

நடிகர் கார்த்தி நடித்துள்ள பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2, கைதி உள்ளிட்ட படங்கல் 100 கோடிக்கும் மேல் கலெக்ட் செய்திருக்கிறது. 

3 /11

விக்ரம் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகம், ஐ உள்ளிட்ட படங்கள் 100 கோடியை தாண்டி வசூலித்திருக்கின்றன. 

4 /11

சிலம்பரசன்: இவர் நடிப்பில் வெளியான மாநாடு படம் 100 கோடி வசூலித்திருக்கிறது. 

5 /11

சிவகார்த்திகேயன் : இவர் நடித்த டான், டாக்டர் உள்ளிட்ட படங்கள் 100 கோடிக்கும் மேல் வசூலித்து ஹிட் அடித்திருக்கின்றன. 

6 /11

சூர்யா: சூர்யாவின் சிங்கம் 2, காப்பான், 24 உள்ளிட்ட படங்கள் 100 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கிறதாம். 

7 /11

தனுஷ்: இவர் நடிப்பில் வெளிவந்திருக்கும் வாத்தி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்கள் 100 கோடியை தாண்டி கலெக்ட் செய்திருக்கின்றன. 

8 /11

அஜித் குமார்: அஜித் நடிப்பில் வெளியான வேதாளம், விஸ்வாசம், துணிவு உள்ளிட்ட படங்கள் 100 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கிறது. 

9 /11

விஜய்: நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கணக்கிலடங்கா படங்கள் 100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளன. இவருக்கு முதன் முதலாக 100 கோடியை வசூலித்து தந்த படம் துப்பாக்கி. 

10 /11

கமல்ஹாசனின் படங்கள் பல 100 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கின்றன. முதன் முதலில் 100 கோடி வசூல் செய்த இவரது பட்ம, ‘தசாவதாரம்’. 

11 /11

ரஜினிகாந்த்: ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்திருகும் படங்கள் 100 கோடி வசூலிக்கவில்லை என்றால்தான் ஆச்சரியும் எனும் நிலை வந்து விட்டது. இவருக்கு முதன் முதலில் 100 கோடி வசூலை பெற்று தந்த படம் ‘சிவாஜி’.