TN Lok Sabha Election Results 2024 Top 5 Candidates : கடந்த 2 மாதங்களாக சூடு பிடித்து வந்த தேர்தல் களம், வாக்கு எண்ணிக்கைகள் முடிந்த நிலையில், தற்போது ஓய்ந்திருக்கிறது. இந்த நிலையில், தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பட்டியலை பார்க்கலாம்.
TN Lok Sabha Election Results 2024 Top 5 Candidates : தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல், கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தேர்தல் நடைப்பெற்றது. முதற்கட்டமாக தமிழகத்தில் நடைப்பெற்றதை தொடர்ந்து 7ஆம் கட்ட தேர்தல் கடந்த ஜூன் 1ஆம் தேதி முடிவடைந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் கணிக்கப்பட்ட தொகுதிகளை விட, காங்கிரஸ் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. அதே போல, பாஜகவும் கணிக்கப்பட்டதை விட அதிக தொகுதிகளில் தோல்வியடைந்திருக்கிறது. முக்கியமாக தமிழகத்தில், பாஜக கட்சிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை. எனவே, ‘தனித்து நின்ற தமிழ்நாடு’ என்று மக்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பட்டியலை பார்ப்போம்.
நாடாளுமன்ற தேர்தல் 2024 இந்த வருடத்தில் நடைப்பெற்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்த இந்தியாவே உற்று நோக்கி பார்க்கும் வகையில் இருந்தது. காரணம், இது இந்தியா கூட்டணி vs ஆளும் பாஜக அரசுக்கு இடையேயான தேர்தலாக மட்டுமன்றி, ஜனநாயகம் vs அடக்குமுறைக்கு எதிரான தேர்தலாக பார்க்கப்பட்டது.
தமிழகத்தில், பாஜக பிற கட்சிகளின் கூட்டணியுடன் சேர்த்து மொத்தம் 12 தொகுதிகளில் நின்றது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தனது கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும் என கூறிய நிலையில், அது தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு தவிடு பொடியானது. தமிழ் நாட்டில், பாஜகவிற்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை.
தமிழகத்தில் திமுக-இந்தியா கூட்டணி மொத்தம் 40 தொகுதிகளில் நின்றது. புதுச்சேரி உள்பட, நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது, திமுக. இதையடுத்து மக்கள் பலர் “நாற்பதும் நமதே” என்று இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தென்னிந்தியாவில் பாஜக கட்சி நுழைய முடியாது என்று கூறி வந்தனர். ஆனால், கேரளா மற்றும் கர்நாடகாவில் பாஜக மக்களின் வாக்கை சம்பாதித்து இருக்கிறது. இதனால், "TN will remain independent kingdom" என மக்கள் கூறி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசிகாந்த் செந்தில், திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்டார். இவருக்கு கிடைத்த மொத்த வாக்குகள் 7,96,956-வித்தியாசம் -5,72,155
சச்சிதானந்தம் சிபிஐ (எம்) திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டார், சிபிஐஎம் கட்சியை சேர்ந்த சச்சிதானந்தம். இவர் 4,43,821 வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 6,70,149 ஆகும்.
டி.ஆர்.பாலு: திமுக கட்சியை சேர்ந்த டி.ஆர்.பாலு ஸ்ரீபெரம்புதூர் தொகுதியில் நின்று 7,58,611 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் 4,42,009 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
கனிமொழி கருணாநிதி : தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி மொத்தம் 5,40,729 வாக்குகளை பெற்றிருந்தார். இவர், 3,92,738 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அருண் நேரு: பெரம்பலூர் தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்டார் அருண் நேரு. இவர் பெற்ற மொத்த வாக்குகள்-6,03,209, வித்தியாசம் 3,89,107 வாக்குகள் ஆகும்.