Tips To Get Rid Of Dark Circles : பலருக்கு கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்கும். இதை எப்படி சரிசெய்வது? இங்கு முழு விவரத்தை பார்ப்போம்!
Tips To Get Rid Of Dark Circles : கருவளையம் என்பது, உலகம் முழுவதும் பலர் சந்திக்கும் பிரச்சனையாக இருக்கிறது. இதனால், குறைவான வயதில் இருப்பவர்கள் கூட, வயது கூடியவர்களாக தெரிகின்றனர். இதற்கு மன அழுத்தம், பதற்றம், குடி பழக்கம் போன்றவற்றால் கருவளையம் ஏற்படலாம். இதை எப்படி சரி செய்யலாம்? இதோ முழு விவரம்!
கருவளையங்கள்: கருவளையங்களை சரிசெய்ய, நாம் சாப்பிட வேண்டிய சில உணவுகள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
தர்பூசணி: தர்பூசணி, ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்தது. இது, கண் பாதிப்பில் இருந்து தவிர்க்க உதவும். இதில் 92% தண்ணீர் நிறைந்திருப்பதால் உடலில் நீர்ச்சத்தும் அதிகரிக்கும்.
தக்காளி: தக்காளியில் இருக்கும் சத்துகள், சருமத்தை பொலிவாக்க உதவும். இதில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி சத்துகள் சருமத்தை பொலிவாக்கும்.
பப்பாளி: பப்பாளியில் வைட்டமின் ஏ சத்துகள் இருக்கிறது. இது, கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையத்தை நீக்க உதவும். இதில் இருக்கும் வைட்டமின் சி சத்துகள் முகத்தை பொலிவுற செய்யும்.
ஆரஞ்சு: ஆரஞ்சில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஏ சத்துகள், முகத்தில் இருக்கும் கருமைகளை தவிர்க்க இதை சாப்பிடலாம். இதன் தோலும் சருமத்தை பொலிவாக்க உதவும்.
கீரை வகைகள்: கீரை வகை காய்கறிகளில், வைட்டமின் கே சத்துகள் முகத்தை பொலிவாக்கும். இதனால், உடலில் ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். சில சமயங்களில் தூக்கமின்மை பிரச்சனையில் இருக்கும் போது, கண்கள் வீங்கியது போல தோன்றும். இதை தவிர்க்க, கீரை வகை காய்கறிகளை எடுத்துக்கொள்ளலாம்.
வெள்ளரிக்காய்: வெள்ளரிக்காயில் அதிக நீர்ச்சத்து இருப்பதாக கூறப்படுகிறது. இது சருமத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. வெள்ளரிக்காய் சாப்பிடுவது கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதால், கருவளையத்தை ஏற்படுத்துவதை நிறுத்தும். அது மட்டுமன்றி, இது ரத்த நாணங்களை அதிகரிக்கவும் உதவும்.
ப்ளூ பெர்ரீஸ்: ப்ளூ பெர்ரியில் ஒமேகா 3, வைட்டமின் கே மற்றும் சி சத்துகள் இருக்கின்றன. இதை சாப்பிடுவதால், முகம் பொலிவுரும்-கருவளையமும் நீங்கும்.