Tips For Happy Marriage Life : ஒரு சிலருக்கு தங்களின் திருமண வாழ்க்கையில் இருக்கும் ஹனிமூன் பீரியட் நிலைத்து நிற்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதை எப்படி தக்க வைத்துக்க்கொள்ள வேண்டும் தெரியுமா?
Tips For Happy Marriage Life : திருமணம் என்பது இரு மனங்கள் மட்டும் இணையும் உறவு கிடையாது. இரு குடும்பத்தாரும் சேரும் ஒரு இடம் ஆகும். இதில், திருமணம் முடித்த பின்னர் சில நாட்களுக்கு நன்றாக இருக்கும். ஆனால், சண்டை என்பது வரும் போது கொஞ்சம் கொஞ்சமாக பிளவு ஏற்படலாம். இதை தவிர்க்க, என்ன நடந்தாலும் கணவன்-மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் குறையாமல் இருக்க கண்டிப்பாக சில பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது. அவை என்னென்ன தெரியுமா?
சமீப காலமாக, காதல் உறவுகளும் திருமண உறவுகளும் மிகவும் குழப்பமாக மற்றும் சிக்கலாக மாறி வருகிறது. இதனால், பல திருமணங்கள் விரைவில் முடிவடைந்து விடுகின்றன. இதை தவிர்க்க என்ன செய்யலாம்? கணவன் மனைவிக்குள் ஹனிமூன் சமயத்தில் இருக்கும் இணக்கம் முடியாமல் எப்படி பார்த்துக்கொள்ளலாம்? இதோ அதற்கான சில டிப்ஸ்!
கணவன்-மனைவி இருவருக்குமே திருமண உறவிலும், தனிப்பட்ட வாழ்விலும் ஒரே மாதிரியான எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகள் இருக்கிறதா என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். இது, உங்கள் வாழ்வை மகிழ்ச்சியாக, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள உதவும்.
மரியாதை: எந்த ஒரு உறவும், மரியாதையின்மையினால்தான் முதன் முதலில் விரிசல் விட ஆரம்பிக்கும். எனவே, இருவரும் ஒருவருக்கொருவர் எந்த தருணத்திலும், எந்த சண்டையிலும் மரியாதையுடன் பேச வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
காதல் மற்றும் ஏற்றுக்கொள்ளும் தன்மை: திருமண உறவில் ஒருவரை ஒருவர் அதீதமாக காதலிப்பது மிகவும் அவசியம் ஆகும். அது மட்டுமன்றி, தனது கணவன் அல்லது மனைவி இப்படி மாற வேண்டும், தனக்கு பிடித்தது போல் இருக்க வேண்டும் என்று நினைக்க கூடாது.
நேர்மை: திருமண உறவு மட்டுமல்லாது, எந்த உறவாக இருந்தாலும் அதில் நேர்மை இருந்தால் மட்டுமே அந்த உறவு நிலைக்கும். எனவே, இருவரும் முடிந்த அளவு இருவருக்குள்ளும் நேர்மையுடன் இருக்க வேண்டும்.
கொடுப்பது: பிரதிபலனை எதிர்பாராமல் நாம் ஒருவர் மீது காண்பிக்கும் அன்புதான் கடைசி வரை நிலைக்கும். எனவே, உங்களுக்கு உங்கள் கணவன் அல்லது மனைவி மீது அன்பு காட்ட வேண்டும் என நினைத்தால் அதற்கு ஒரு கட்டுப்பாடு இல்லாமல் காண்பித்துக்கொண்டே இருங்கள். எதிரில் இருக்கும் நபர் அதே போல அன்பு காட்டுகிறாரா இல்லையா என்றெல்லாம் யோசிக்காதீர்கள்.
விவாகரத்து பேச்சு: கணவன்-மனைவிக்குள் எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் விவாகரத்து பேச்சை மட்டும் எடுக்க கூடாது என்பதில் உறுதியாக இருங்கள். இதனால், பின்னாளில் அதை ஒரு தேர்வாக வைப்பதை கூட தவிர்க்கலாம்.
டேட்டிங் செல்வது: காதல் உறவில் இருக்கும் போது மட்டுமல்ல, திருமணத்திற்கு பிறகும் நீங்கள் டேட்டிங் செல்வது அவசியம் ஆகும். எனவே, அடிக்கடி ரொமாண்டிக்காக இருவரும் வெளியில் செல்வது மற்றும் அன்பை பரிமாறிக்கொள்வதை தவிர்க்காதீர்கள்.