இன்று வெளியாகும் 4 தமிழ் படங்கள்!

இந்த வாரம் பல திரைப்படங்கள் வெளியாக உள்ளது.  நேற்று சில படங்கள் வெளியான நிலையில், இன்று 4 தமிழ் படங்கள் வெளியாகிறது.

1 /4

ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'குருதி ஆட்டம்'.  ராக்ஃபோர்ட்  எண்டெர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்தில் பிரியா பவானி ஷங்கர், ராதிகா சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் நடித்துள்ளனர்.    

2 /4

சந்தோஷ் பீட்டர் ஜெயக்குமார் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பொய்க்கால் குதிரை'.  இந்த படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி ரைசா வில்சன் போன்ற பலர் நடித்துள்ளனர்.  

3 /4

1965ம் ஆண்டு காலகட்டத்தில் நடக்கும் காதலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் 'சீதா ராமன்'.  இப்படத்தில் துல்கர் சல்மான், ம்ருனால் தாகூர் மற்றும் ராஷ்மிகா ஆகியோர் நடித்துள்ளனர்.    

4 /4

2014ம் ஆண்டு வெளியான 'யாமிருக்க பயமேன்' படத்தை இயக்கிய இயக்குனர் டீகேயின் அடுத்த படைப்பு தான் 'காட்டேரி'.  இப்படத்தில் வைபவ், வரலக்ஷ்மி சரத்குமார், ஆத்மீகா போன்ற பலர் நடித்துள்ளனர்.