குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் முடியை ஸ்டைலாக வைத்து கொள்வது புடிக்கும். அதே சமயம் முடி பராமரிப்பும் இதற்கு அவசியம். தினமும் தலைக்கு குளிப்பது நல்லதா என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தினசரி தலைக்கு குளிக்கும் போது மன அழுத்தம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. குளிக்கும் போது மன அழுத்த ஹார்மோன்களில் மாற்றம் ஏற்பட்டு மனநிலையை சீராக்க உதவுகிறது.
ஒருவருக்கும் மன அழுத்தம் அதிகமாக இருந்தால் தசை வலி, இதய நோய், அஜீரணம், எடை அதிகரிப்பு போன்ற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுகிறது.
தினசரி 8 முதல் 9 மணி நேரம் தூங்குவது நல்லது என்று சொல்லப்படும் அதே வேளையில் இரவு தூங்கும் முன்பு சூடான தண்ணீரில் குளிப்பது வேகமாக தூங்க உதவும்.
இரவு குளித்துவிட்டு தூங்கும் போது உடல் தசைகள் இலகுவாகி, இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலில் உள்ள வெப்பத்தை வெளியேற்றி ஆழமான தூக்கத்திற்கு வழிவகுக்கிறது.
தினசரி தலைக்கு குளிக்கும் போது உடலில் ஏதேனும் புண்கள் இருந்தால் சீக்கிரம் சரியாகும் என்று கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட இடத்தில் வெதுவெதுப்பான நீரை கொண்டு தினசரி கழுவுவது நல்லது.
வெதுவெதுப்பான நீரில் குளிக்கும் போது தசை வலி, பதற்றம், வீக்கம் ஆகியவற்றில் இருந்து விடுபட உதவுகிறது. மேலும் உடல் ஆற்றலை மேம்படுத்த உதவுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறை காலை மற்றும் இரவு தூங்கும் முன்பு குளிப்பது நல்லது.