செப்டம்பர் மாதம் இந்த ராசிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கணும்

September Month Horoscope 2022: மேஷம் முதல் மீனம் ராசிக்காரர்களுக்கு 2022 செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒருவரின் ராசிபலன் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அதேபோல் மாதாந்திர ராசிபலனில், 12 ராசிக்காரர்களின் தொழில், கல்வி, நிதி, திருமண வாழ்க்கை, வணிகம், வேலை தொடர்பான தகவல்கள் வழங்கப்படுகின்றனர். அந்தவகையில் ஜோதிட சாஸ்திரப்படி, செப்டம்பர் மாதத்தில் சுக்கிரன், வியாழன், செவ்வாய், புதன் மற்றும் சூரியன் ஆகிய கிரகங்களின் பெயர்ச்சியாக உள்ளது. எனவே இந்த பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் ராசிக்காரர்களுக்கு 2022 செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள். முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

1 /12

மேஷம்: குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வரலாம். தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். எதிர்மறை எண்ணங்கள் உங்கள் மனதில் ஏற்படும். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.  

2 /12

ரிஷபம்: செப்டம்பர் மாதம் அரசு அதிகாரிகளுக்கு சுப பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.

3 /12

மிதுனம்: குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். சமூக கௌரவம் அதிகரிக்கும்.

4 /12

கடகம்: இந்த மாதம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வீண் செலவுகள் கூடும். மாணவர்களுக்கு இந்த மாதம் பல நல்ல வாய்ப்புகள் வரும்.

5 /12

சிம்மம்: சமூக மட்டத்திலோ அல்லது பணியிடத்திலோ உங்கள் வார்த்தைகளால் நீங்கள் ஒருவரை காயப்படுத்தலாம். மாத தொடக்கத்தில் சிம்ம ராசி மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறலாம். இத்துடன் கலைத்துறையில் தொடர்புடையவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும் வாய்ப்பும் உருவாகும்.  

6 /12

கன்னி: கோபம் அதிகரிக்கும் அதனால் கோபத்தைக் கட்டுப்படுத்த யோகா பயிற்சி செய்யுங்கள். செப்டம்பர் மாதத்தில் பல சவாலான பணிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.  

7 /12

துலாம்: இந்த மாதம் தொழிலதிபர்களுக்கு சாதகமாக நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் சில ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம்.

8 /12

விருச்சிகம்: திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகம் கைக்கூடும். குடும்ப உறுப்பினர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.  

9 /12

தனுசு: இந்த மாதம் உங்கள் குடும்ப வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கும்.

10 /12

மகரம்: மகர ராசிக்காரர்கள் இந்த மாதம் சிக்கலை சந்திக்க நேரிடும். குடும்ப வாழ்க்கையில் அடிக்கடி சண்டைகள் ஏற்படும். திருமணமானவர்கள் தங்கள் மனைவியுடன் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

11 /12

கும்பம்: இந்த மாதம் உங்களுக்கு பல புதிய வாய்ப்புகள் தேடி வரும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். மனதளவில் புத்துணர்ச்சி அடைவீர்கள்.

12 /12

மீனம்: செப்டம்பர் மாதம் உங்களுக்கு சங்கடங்கள் ஏற்படுத்தி தரும். பெரியவர்களின் ஆலோசனையின்றி எந்த முடிவையும் எடுக்காதீர்கள். வீண் செலவுகள் கூடும்.