சுற்றுலா..! தடுப்பூசி போடாதவர்களை வரவேற்கும் நாடுகள்..!

இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கும் நீங்கள், வெளிநாடு சுற்றுலா செல்ல விரும்பினால் இந்த நாடுகளுக்கு தாராளமாக செல்லலாம். 

கோவிட் பரவலுக்குப் பிறகு எங்கு சென்றாலும் தடுப்பூசி கட்டாயம் என்ற அறிவிப்பு இருக்கும் நிலையில், சில நாடுகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத சுற்றுலாப் பயணிகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது. 

 

1 /4

போர்ச்சுகல் நாட்டிற்குள் நுழைவதற்கு முன்பாக கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என்பதற்கான சான்றுகளை சுற்றுலாப் பயணிகள் வைத்திருக்க வேண்டும். அதாவது 72 மணி நேரத்துக்கு முன்னதாக எடுக்கப்பட்ட பிசிஆர் டெஸ்டின் ரிசல்டை வைத்திருந்தால் போதும். தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை.

2 /4

மேற்குறிப்பிட்ட நாடுகளைப் போலவே மாலத்தீவுக்கு செல்ல விரும்பும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத சுற்றுலாப் பயணிகள் தாராளமாக செல்லலாம். ஒரே ஒரு கண்டிஷன் என்னவென்றால், சுற்றுலா வந்திருக்கும் உங்களுக்கு கொரோனா இல்லை என்பதை நிரூப்பிக்கும் மருத்துவரின் சான்று இருக்க வேண்டும்.

3 /4

கிரீஸ் சுற்றுலா செல்ல விரும்புவர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ் அவசியமில்லை. அங்கு சென்ற பிறகு பயணிகள் பிறநாடுகளில் தங்கியிருந்த காலம், சொந்த நாடு உள்ளிட்ட விவரங்களை சமர்பிக்க வேண்டும். மேலும், கிரீஸ் சென்ற 72 மணி நேரத்துக்குள் கொரோனா பரிசோதனை நெகடிவ் சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.

4 /4

குரோஷியாவிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத சுற்றுப் பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் குரோஷியாவிற்கு செல்வதற்கு முன்னதாக 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கொரோனா டெஸ்ட் முடிவுகள் அல்லது 48 மணி நேரத்துக்கு முன்னதாக எடுக்கப்பட்ட ஆன்டிஜென் ரிசல்ட் இருந்தால் போதும். உங்களை குரோஷியா வரவேற்கும்.