இந்த வங்கிகள் சேவிங் கணக்கில் 7 சதவீதம் வரை வட்டி தருதாம்

Savings Account Interest Rate: Savings Account Interest Rate: நீங்கள் எங்காவது வேலை செய்தாலோ அல்லது சிறு வணிகம் செய்தாலோ, உங்கள் வருவாயில் ஒரு பகுதியைச் சேமிப்பாக வைத்திருப்பீர்கள். ஆனால் பெரும்பாலான வங்கிகள் சேமிப்புக் கணக்கில் நல்ல வட்டி தருவதில்லை. அதன்படி சேமிப்புக் கணக்கில் 7 சதவீதம் வரை வட்டி வழங்கும் நாட்டில் உள்ள 5 சிறு நிதி வங்கிகளைப் பற்றி இன்று நாம் காண உள்ளோம்.

 

1 /5

தற்போது, ​​ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 7 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த சிறு நிதி வங்கியில் பராமரிக்க வேண்டிய சராசரி மாத இருப்புத் தொகை ரூ.2500 முதல் ரூ.10000 வரை இருக்கும். அதே சமயம், இந்த வங்கியில் 5 லட்சத்துக்கும் மேலான டெபாசிட்களுக்கு 7 சதவீதம் வட்டி விகிதமாக உள்ளது.

2 /5

ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி தனது சேமிப்புக் கணக்குகளுக்கு 7 சதவீதம் வரை வருடாந்திர வட்டி விகிதத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இதற்கு டெபாசிட் தொகை ஐந்து லட்சத்திற்கு மேல் இருக்க வேண்டும். ரூ.1 லட்சத்துக்கு மேல் மற்றும் ரூ.5 லட்சம் வரையிலான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 6% ஆகும்.

3 /5

ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியில் உள்ள சேமிப்புக் கணக்கில் வாடிக்கையாளர்கள் 6 சதவீதம் வரை வருடாந்திர வட்டி பெறுகிறார்கள். இந்த வட்டி விகிதங்கள் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையிலான டெபாசிட்டுகளுக்கு பொருந்தும். 

4 /5

இரண்டு வங்கிகளையும் போலவே, உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியும் (Ujjivan Small Finance Bank) தனது வாடிக்கையாளர்களுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் சேமிப்புக் கணக்கைத் திறக்கும் வசதியை வழங்குகிறது.

5 /5

தற்போது, ​​DCB வங்கியில் சேமிப்புக் கணக்கில் 6.5 சதவீத வட்டி விகிதம் உள்ளது. இந்த தனியார் வங்கியில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க, 2500 முதல் 5000 வரை வைத்திருக்க வேண்டும்.