Liver Disease: கல்லீரல் நமது உடலில் மிக முக்கியமான உறுப்பாகும். ஒரு நபரின் முழு ஆரோக்கியமும் இதைப் பொறுத்து உள்ளது. கல்லீரல் சரியாக வேலை செய்தால், எந்த நோயும் அருகில் அண்டாது. எனினும், கல்லீரலில் தொந்தரவு இருந்தால், உடலில் பல நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கல்லீரலில் ஏற்படும் கோளாறுகளால் இதய நோய்களும் வரலாம் என்பதும் பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
கல்லீரல் பாதிப்பில் இரண்டு வகைகள் உள்ளன. கடுமையான பாதிப்பு என்ற வகையில், எந்த அறிகுறியும் இல்லாமல் உங்கள் கல்லீரல் சேதமடைந்திருந்தால், இதற்கு காளான் விஷம் அல்லது மருந்துகளை அதிகமாக உட்கொண்டது காரணமாக இருக்கலாம். நாள்பட்ட வகையில் கல்லீரல் படிப்படியாக மோசமடைகிறது. இது பின்னர் கல்லீரல் ஈரல் அழற்சிக்கு வழிவகுக்கும். இது அதிகப்படியான குடிப்பழக்கத்தின் காரணமாக ஏற்படக்கூடும்.
கல்லீரல் சேதத்தின் ஆரம்ப அறிகுறிகள் பற்றி அனைவரும் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியமாகும். இவற்றை நிச்சயம் புறக்கணிக்கக்கூடாது. கல்லீரல் சேதத்தின் முக்கிய ஆரம்ப அறிகுறிகள் பற்றி இங்கே காணலாம்.
மீண்டும் மீண்டும் வாந்தி சங்கடம் ஏற்பட்டால், வாந்தி எடுப்பது போல் உணர்ந்தால், அது கல்லீரல் பாதிப்புக்கான அறிகுறியாக இருக்கலாம். அப்படிப்பட்ட சமயங்களில் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது.
பசி இல்லாத உணர்வு இருந்தால், சாப்பிட விருப்பம் இல்லாமல் இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் சென்று அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும். இதுவும் கல்லீரல் பாதிப்புக்கான அறிகுறியாக இருக்கலாம்.
கல்லீரல் கெட்டுப் போக ஆரம்பித்தால் இரத்தப் பற்றாக்குறை ஏற்படும். இதன் காரணமாக உடல் வெளிறிப் போகும்.
கல்லீரல் செயலிழப்பால் திடீரென எடை குறையத் தொடங்குகிறது. இந்த அறிகுறிகள் அனைத்தும் உங்கள் உடலில் இருந்தால், கண்டிப்பாக இவற்றை புறக்கணிக்காதீர்கள்.