சமீபத்தில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லாவின் மனைவி நடாஷா பூனவல்லாவின் வீடியோ ஒன்று வைரலாகியது. இதன் போது, நடாஷா பூனவல்லா வைத்திருந்த ஹேண்ட்பேக்கின் விலை சுமார் ரூ .80 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த படங்கள் இணையத்தில் மிகவும் வைரலாகின ஆனால், அதையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு, உள்ள உலகின் விலையர்ந்த ஹேண்ட்பபேக் சிலவற்றை பார்க்கலாம்.
2020 நவம்பர் மாதம் , உலகின் மிக விலையுயர்ந்த ஹேண்ட்பேக் சந்தைக்கு வந்தது. இதன் மதிப்பு 7.18 அமெரிக்க டாலர் அல்லது 52 கோடி ரூபாய் . இந்த Dubbed Parva Mea ஹேண்ட் பேக் , முதலை தோலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. மேலும் வைரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் வரை, உலகின் மிக விலையுயர்ந்த ஹேட்பேக் என்ற பெருமையை Mouawad 1001 Nights Diamond Purse என்ற வைரங்கள் பதித்த ஹேண்ட் பேக் தக்க வைத்திருந்தது. இது கின்னஸ் உலக சாதனையிலும் இடம் பெற்றது. இதன் மதிப்பு 3.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (தோராயமாக 28 கோடி). மேலும் இந்த ஹேண்ட்பேக் 18 காரட் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதில் 4,517 வைரங்கள் (105 மஞ்சள், 56 இளஞ்சிவப்பு மற்றும் 4,356 நிறமற்ற வைரங்கள்) உள்ளன. வைரங்களின் மொத்த எடை 381.92 காரட் ஆகும்.
ஹெர்ம்ஸ் கெல்லி ரோஸ் கோல்ட் (Hermès Kelly Rose Gold) ஹேண்ட் பேக் உலகின் மிக விலையுயர்ந்த கைப்பைகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. பிரபல ஷூ வடிவமைப்பாளரான பியர் ஹார்டியின் உதவியுடன் இது வடிவமைக்கப்பட்டது. இதில் மொத்தம் 1160 வைர கற்கள் உள்ளன. மேலும் முதலை தோல் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 15 கோடி).
ஒவ்வொரு பெண்ணும் வாங்க விரும்பும் , பிரபலமான ஹாண்ட் பேக் பிராண்ட், ஹெர்மெஸ் (Hermés). கின்சா தனகா பிர்கின் (Ginza Tanaka Birkin)ஹாண்ட்பேக்கில் 2,000 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதன் நடுவில் ஒரு பெரிய வைரக்கல் பதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஹேண்ட்பேக், நகை வியாபாரி பியர் ஹார்டியின் உதவியுடன் 2012 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஹாண்ட்பேக்கில் 1,160 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த ஹாண்ட் பேக் சங்கிலி இணைப்புகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன.