புதுடெல்லி: சென்னை: 2022 புத்தாண்டு பிறந்து விட்டது. இந்த பெருந்தொற்று காலத்திலும் யாருக்கு சுப காரியம் நடைபெறும். திருமணம் கை கூடி வரும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். இந்த ஆண்டு எப்படி இருக்கிறது என்று பலன்கள் கணிக்கப்பட்டுள்ளன. அதன்படி 2022 ஜாதகத்தின்படி, 5 ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு சில கஷ்டன்களை சந்திக்க நேரிடும் அவை எந்த ராசிகாரர்கள் என்று பார்ப்போம்.
மேஷ ராசிக்காரர்கள் 2022-ம் ஆண்டு வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகளைக் காணலாம். ஆண்டின் முதல் காலாண்டில் உடல்நலக் குறைபாடுகள் இருக்கலாம். ஆண்டின் பிற்பகுதியிலும், ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை.
மிதுன ராசிக்காரர்கள் இந்த வருடம் தொழிலில் முதலில் நஷ்டமும், பிறகு லாபமும் அடைவார்கள். பண இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆண்டின் முதல் காலாண்டில் பண விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
கடக ராசிக்காரர்களுக்கு 2022 சவாலாக இருக்கும். ஏப்ரலில் சனியின் ராசி மாற்றம் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நிதி நிலைமையில் மோசமான விளைவு ஏற்படலாம்.
கன்னி ராசிக்காரர்களுக்கு 2022-ம் ஆண்டு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. வாழ்க்கையின் வெவ்வேறு முனைகளில் சிறிய மற்றும் பெரிய பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
தனுசு ராசிக்காரர்களை இந்த ஆண்டு மன உளைச்சலுக்கு ஆளாக்குவார்கள். வாழ்க்கையில் பல சிரமங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் யாரிடமும் கசப்பாக பேசாமல் இருப்பது நல்லது. குறிப்பாக வாழ்க்கை துணையுடன் மிகவும் கவனமாக இருக்கவும்.