Drinks To Lower Cholesterol Level : உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் பல நோய்கள் ஏற்படக் கூடும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் சில பானங்களை குடித்து வந்தால் இதற்கான தீர்வை அசால்டாக பெறலாம்.
Cholesterol Lowering Drinks : உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது இவை பல கடுமையான நோய்களை ஏற்படுத்தலாம். குறிப்பாக மாரடைப்பு, பக்கவாதம் போன்ற இதய நோய் அபாயம் அதிகரிக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த சில ஆரோக்கியமான பானங்களை குடித்தால் போதும். அத்தகைய சில பானங்கள் எவை என்று பார்ப்போம்.
கிரீன் டீயில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளதால், இவை உடலில் தேங்கியிருக்கும் அதிக கொழுப்பைக் குறைக்க உதவும்.
சோயாவில் கொழுப்பின் அளவு மிகவும் குறை என்பதால் இதன் பாலை தினமும் குடிப்பது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க பெரிதும் உதவும்.
ஓட்ஸில் பீட்டா-குளுக்கன்களில் அதிகமாக உள்ளதால், தினமும் இந்த ஓட்ஸ் பானத்தை குடித்து வந்தால் அதிகரித்து வரும் கொலஸ்ட்ராலை குறைக்கலாம்.
லைகோபீன் எனப்படும் ஒரு தனிமம் தக்காளியில் உள்ளதால் இவை அதிக கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். எனவே இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளவும்.
அதிகரிக்கும் கொலஸ்ட்ராலை கட்டுபடுத்த காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு குடிக்கலாம்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.