காட்சி 2 நிமிஷம் தான் ஆனால் 14 மணி நேரம் தண்ணிக்குள்ள நின்ன ரகுல் ப்ரீத் சிங்

2 நிமிட காட்சிக்காக சுமார் 14 மணி நேரம் தண்ணீருக்குள் நின்றிருக்கிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

 

 

1 /6

சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்தில் நடித்த முடித்துள்ள ரகுல் பிரீத் சிங், தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.   

2 /6

இந்த நிலையில் தெலுங்கு, ஹிந்தியில் தயாராகியுள்ள ஐ லவ் யூ என்ற படத்தில் தற்போது நடித்துள்ளார். ஜூன் 16ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார் ரகுல்.  

3 /6

இந்நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛ஐ லவ் யூ படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு இரண்டு நிமிட காட்சிக்காக 14 மணி நேரம் தான் தண்ணீருக்குள் நின்று நடித்ததாக கூறியுள்ளார்.   

4 /6

அதோடு இரண்டு நிமிடம் மூச்சை அடக்கியபடி தண்ணீருக்குள் மூழ்கி நடிக்க வேண்டிய இந்த காட்சிக்காக ஒரு மாதம் தான் பயிற்சி எடுத்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.   

5 /6

மேலும் , கடுமையான குளிரில் தான் அந்த காட்சியில் நடித்ததால் ஒவ்வொரு ஷாட்டில் நடித்து முடித்ததும் படக்குழு என் மீது சூடான தண்ணீரை ஊற்றுவார்கள்.   

6 /6

அந்த அளவுக்கு இந்த இரண்டு நிமிட காட்சிக்காக ரொம்ப கஷ்டப்பட்டு நடித்தேன் என்று கூறியிருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.